பெண்களால் முடியும் - பாகம் 1 (Author : Manimekalai Theriappan)

மேகலா : ஹாய் கிருஷ்ணா…., புத்தம் புது தலைப்புடன் நானும் வந்திட்டேன்… என்ன தலைப்பு என்று சொல் பார்க்கலாம்…

கிருஷ்ணர் : தலைப்பு நான் சொல்லணும் என்று இங்கு வந்தேன். நீ ஏற்கனவே decide பண்ணிட்டயா…. சரி, என்ன தலைப்பு….?

மேகலா : கிருஷ்ணா! நீ என்ன தலைப்பை select பண்ணியிருக்கிறாய்…., அதச் சொல்லு முதலில்…. நான் பிறகு சொல்கிறேன்…

கிருஷ்ணர் : ‘பெண்களால் முடியும்’ – என்ற தலைப்பில், ‘உன் கருத்து’…, ‘உன் பார்வை’…, இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்னு நினைத்தேன்…. அதையே, கட்டுரையின் தலைப்பாகச் சொல்லலாம் என்று நினைத்தேன்…

மேகலா : வாவ்! Great கிருஷ்ணா…, இதே தலைப்பைத்தான் நானும் decide பண்ணியிருந்தேன்… நம்ம ரெண்டு பேர் மனசும் ஒண்ணு போல நினைக்குது கிருஷ்ணா.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நெசம்மாவா…. ஏய் லூசு…! உனக்குள்ளே இருப்பவன் நான்… உன்னோடவே சுற்றித் திரிபவன் நான்…. நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிய மாட்டேனா….

மேகலா : ஓ….! ஆமாம்ல….. ஆனா, நீ நினைப்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியலையே…, அது ஏன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அவ்வளவுதான் உன் ‘maturity’…. என்னை நீ அறிந்து கொண்டதன் லட்சணம் அவ்வளவுதான்…. சரி…, நம்ம விவாதத்தைத் தொடங்குவோமா… ‘சாதனைப் பெண்கள்’ என்று சொல்லாமல், ‘பெண்களால் முடியும்’ – என்று ஏன் தலைப்பை select பண்ணினாய்?

மேகலா : ‘சாதனைப் பெண்கள்’ என்றால், ‘celebrities’ மட்டும் தான் சொல்ல முடியுமோ… அன்றாட வாழ்க்கையில், போராடிப் போராடி தங்கள் கடமைகளை நிறைவேற்றிய பெண்களை சாதனையாளர்களாகப் பார்க்காமல் விட்டு விடுவோமோ என்று யோசிச்சேன் கிருஷ்ணா…. அதனால்தான், ‘பெண்களால் முடியும்’ என்று யோசிச்சேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அன்றாட வாழ்க்கையில், தங்கள் அன்றாட பிரச்னைகளையே போராடிப் போராடி, தங்கள் கடமைகளைச் செய்பவர்கள் கூட ஒரு வகையில் சாதிச்ச பெண்மணிகள்தான்… சரி…, நீ என்ன நினைக்கிறாயோ… அப்படியே பேசுவோம்… ஆமாம், இந்த ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற காரியத்தை, பெண்கள் சாதாரணமாகச் செய்தார்கள் என்று எந்தக் காரியத்தைச் சொல்லுகிறாய்….

மேகலா : கிருஷ்ணா…., பொதுவாக உடல் வலிமையில், தனிமையில் தற்காத்துக் கொள்வதில், பெண்களை விட ஆண்கள் பலம் மிகுந்தவர்கள் என்பது எல்லோரும் ஒப்புக் கொள்ளும் உண்மை….. இது ஒருபுறம் இருக்க…, ஒரு புறநானூற்றுப் பாடலில், ஒரு பெண், புலியை முறத்தால் விரட்டிய ‘மறப்பெண்’ என்று புலவரால் பாராட்டப்படுகிறாள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சுவாரஸ்யமான கதையா இருக்கே…, எங்க சொல்லு பார்க்கலாம்….

மேகலா : ஒருநாள் காட்டுக்குள்ளே விறகு பொறுக்கப் போன மறப்பெண்…, தன்னோடேயே தன் குழந்தையையும் தூக்கிச் சென்றாள்… குழந்தையைத் தூளியில் போட்டு, தாலாட்டி தூங்கச் செய்த பின்…, அடுப்பெரிக்க விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அந்த வனத்துக்குள்ளே சுற்றித் திரியும் புலி ஒன்று, தாலாட்டும் பெண்ணையும், தூளியில் தூங்கும் குழந்தையையும் பார்த்து விட்டது. பெண்ணின் மீது பாயத் தயாராகி உறுமியது. புலியின் உறுமல் கேட்ட பெண்…, ‘எங்கே தன்பிள்ளையின் மீது புலி பாய்ந்து விடுமோ’ என்று பதைபதைத்து, கையில் கிடந்த வீச்சரிவாளை, இடக் கையில் பிடித்துக் கொண்டு, வலக்கையில் வைத்திருந்த முறத்தினால், ‘சூ,சூ’ என்று விரட்டி, சருகுகளை எரித்து, நெருப்பைக் காட்டி புலியை விரட்டியே விட்டாள் கிருஷ்ணா…. ஆண்களால் மட்டும் தான் முடியும் என்பதில்லை. தனியாகச் செல்ல வேண்டிய அவசியம் வரும் போது, பெண் காட்டிற்குள் தனியாகச் செல்கிறாள்…. குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வரும் போது…, பொறுப்பைக் கையிலெடுக்கிறாள்.... புலியைக் கூட விரட்டக் கூடிய தைரியம், சந்தர்ப்ப சூழ்நிலையால் பெண்களுக்கு வருகிறது…. மென்மையான மனம் கொண்ட பெண் தான்… ‘அது, புலியைச் சந்திக்கும் வரை மட்டும் தான்… புலியை விரட்ட வேண்டிய சூழ்நிலை வந்து விட்டால்…, மென்மையான பெண் கூட, சிங்கமாக மாறி விடுவாள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஓ! குடும்பத்தைக் காப்பாற்ற களம் இறங்குவாள்… களத்தில் புலியைக் கூட விரட்டும் வீரம் காட்டுவாள் பெண் என்கிறாயா… உண்மைதான்…. இக்கட்டான சூழ்நிலையில் வரும் தைரியம்…, ஆண்களுக்கு மட்டுமல்ல…, பெண்களாலும் முடியும் என்று ரொம்ப சரியாகச் சொன்னாய்…. சரி…, வீரம்…, விளையாட்டு…, இதெல்லாம் பெண்களாலும் முடியும்… இதை easy-யா சொல்லிருவ…. நம்ம அப்துல் கலாம் மாதிரி, ஏவுகலங்களையும்…, ஏவுகணைகளையும் விண்ணில் பறக்க விடும் பெண்களைத் தெரியுமா….

மேகலா : ஏன் தெரியாது…. கிருஷ்ணா…., இப்போ…, அப்துல் கலாம் ஐயா அவர்கள் விஞ்ஞானியாக பணிபுரிந்த ‘இஸ்ரோ’வில் பணி செய்யும் விஞ்ஞானிகளில் நிறையப் பேர் பெண்கள் தான் கிருஷ்ணா…. அதிலும், நிலவுக்கு அனுப்பிய விண்கலம் ‘சந்திராயன்-3’…, அந்த project-ன் விஞ்ஞானிகள் நிறையப் பேர் பெண்கள் தான் கிருஷ்ணா…. நிலவின் தென்பகுதியில் இறங்கிய ‘ரோவர்’…, நிலவைப் படம் பிடித்து அனுப்புகிறது. விண்கலத்தில், இன்ன நாளில், ரோவர்…, இன்ன திசையை படம் பிடித்து அனுப்ப வேண்டும் என்பதான் program-ஐ, பெண்களும், ஆண்களுமான விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்…. ரோவர், நிலவில் கால் பதித்த அன்று, இங்கு இஸ்ரோவில், விஞ்ஞானிகளின் முகத்தில் தெரிந்த சந்தோஷம்…. அடேயப்பா…, இவர்கள், ஆண்கள், பெண்கள் இல்ல கிருஷ்ணா…. ’சாதனையாளர்கள்’……

கிருஷ்ணர் : ஆம்மாம்…. சரியாகச் சொன்னாய்….

‘ஆணுக்குப் பெண் இங்கே

இளைத்தவரில்லை காணென்று கும்மியடி’ –

என்ற பாரதியாரின் வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது மேகலா…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?