பெண்களால் முடியும் - பாகம் 1 (Author : Manimekalai Theriappan)
மேகலா : ஹாய் கிருஷ்ணா…., புத்தம் புது தலைப்புடன் நானும் வந்திட்டேன்… என்ன தலைப்பு என்று சொல் பார்க்கலாம்… கிருஷ்ணர் : தலைப்பு நான் சொல்லணும் என்று இங்கு வந்தேன். நீ ஏற்கனவே decide பண்ணிட்டயா…. சரி, என்ன தலைப்பு….? மேகலா : கிருஷ்ணா! நீ என்ன தலைப்பை select பண்ணியிருக்கிறாய்…., அதச் சொல்லு முதலில்…. நான் பிறகு சொல்கிறேன்… கிருஷ்ணர் : ‘பெண்களால் முடியும்’ – என்ற தலைப்பில், ‘உன் கருத்து’…, ‘உன் பார்வை’…, இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்னு நினைத்தேன்…. அதையே, கட்டுரையின் தலைப்பாகச் சொல்லலாம் என்று நினைத்தேன்… மேகலா : வாவ்! Great கிருஷ்ணா…, இதே தலைப்பைத்தான் நானும் decide பண்ணியிருந்தேன்… நம்ம ரெண்டு பேர் மனசும் ஒண்ணு போல நினைக்குது கிருஷ்ணா.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர் : நெசம்மாவா…. ஏய் லூசு…! உனக்குள்ளே இருப்பவன் நான்… உன்னோடவே சுற்றித் திரிபவன் நான்…. நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிய மாட்டேனா…. மேகலா : ஓ….! ஆமாம்ல….. ஆனா, நீ நினைப்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியலையே…, அது ஏன் கிருஷ்ணா…. ...