Posts

Showing posts from June, 2021

Second wave receding..., third wave approaching.....

Before the second wave of the dreaded pandemic (corona virus) is fully gone, there is talk of the third wave appearing already. The scientists and bureaucrats are scaring us every day, with their updates. How many waves this will have?! Can anyone (Scientists, Bureaucrats, Doctors, Researchers, Crystal ball gazers, Fortune tellers) give us a definite answer? No answer / prediction will be precise, I am sure. Once something takes place, everyone will reel off the reasons for that occurrence. How does the virus spread from one human to another? It is due to the person's weak immune system and non-adherence of the safety norms like, wearing of mask (properly), keeping a safe distance, keeping the hands and legs clean. We never bother to keep ourselves immune to various viruses that attack us. We do not follow any regime - be it doing regular work-outs, yoga practice, taking immune-boosting food regularly. Personal hygiene and increasing our level of immunity are both very important.

யாரெல்லாம் நாவின் சுவைக்கு அடிமை...!

நாவின் சுவைக்கு அடிமையாகாதவர்கள் நம்மில் யாருளர்? நல்ல ‘அமைதியான தூக்கத்திற்கு’ அடுத்ததாக நாம் எல்லோரும் விரும்புவது நல்ல சுவையுள்ள உணவைத்தானே! நம்மில் பலருக்கு, அவரவர் ‘அம்மா’தான் உலகத்திலேயே சிறந்த சமையல் கலைஞர். ஏனெனில், பிறந்தது முதல் நாம் சாப்பிட்டுப் பழகியது அம்மாவின் சமையலைத்தான். (திருமணத்திற்கு அப்புறம், மனைவியின் சமையல் தான் பிடிக்கும் என்பது வேறு விஷயம்!) நம்மில் பலர், நமக்குப் பழக்கப்பட்ட பாரம்பரிய உணவைத்தான் விரும்பி சாப்பிடுவோம். அவைதான் உலகிலேயே சிறந்த, சுவையான உணவு என்று எல்லோரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்வோம். வேறு பிரதேச அல்லது வேறு நாட்டு உணவை எப்போதாவது சாப்பிட்டாலும், (அதை ரசித்தாலும்), நமது உணவே மிகச் சிறந்தது என்ற உணர்வு எல்லோரிடமும் இருக்கும். நமது இடங்களை விட்டு வேறு எங்கு சென்றாலும், நாம் தேடுவது, இட்லி, தோசை, சட்னி, சாம்பார் இவைதான். ஒரு பெங்காலியிடம் கேட்டுப் பாருங்கள். ‘என்ன, மீன் இல்லாத உணவு ஒரு உணவா?’ கேரளாக்காரர் கேட்பார், ‘இதில் தேங்காய் இல்லையா?’ ஆந்திர தேசத்துப் பேர்வழி ஆச்சர்யப்படுவார், ‘என்ன இதில் காரமே இல்லை’ என்று! கர்நாடகாக்காரருக்கு, எதிலும் க

மனிதனைப் பக்குவப்படுத்தும் இடம்....?

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு பகிர்வை வாசித்தேன். ஒரு வகுப்பறை. சுமார் 30 மாணவர்கள். அதில் ஒரு பணக்கார மாணவனுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை ஒரு மாணவன் திருடி விடுகிறான். கொஞ்ச நேரத்தில், கைக்கடிகாரம் காணாமல் போனது, அதன் உரிமயாளருக்குத் தெரிந்து விடுகிறது. யாரைச் சந்தேகிப்பது...? அவன், ஆசிரியரிடம் புகார் கொடுக்கிறான். ஆசிரியர் அதை எப்படிக் கையாண்டார்? மிகவும் சாமர்த்தியமாக, யார் மனமும் புண்படாமல், தவறு செய்த மாணவனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் வகையில்.....! எல்லா மாணவர்களையும் ஒரு வட்ட வடிவில் நிற்க வைத்தார். எல்லோரையும் அவரவர் கண்களை இறுக மூடச் சொன்னார். எல்லோரும் அதன்படிச் செய்தனர். ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் வரிசையாக சோதனை செய்தார். ஒரு மாணவனிடம் கைக்கடிகாரம் இருந்தது. ஆனாலும், அவர் மீதி இருந்த மாணவர்களையும் சோதனை செய்தார் (செய்ததாக நடித்தார்...!). எல்லோரையும் கண்களைத் திறக்கச் சொன்னார். உரிய மாணவனிடம் கைக்கடிகாரத்தைச் சேர்ப்பித்தார். வேறு எதையும் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்து பல ஆண்டுகள் கழித்து, கைக்கடிகாரத்தைத் திருடிய மாணவர், அந்த ஆசிரியரை சந்திக்க நேர்ந்த