Posts

Showing posts from October, 2022

’இலவசம்’ என்று ஏதாவது இருக்கிறதா....?

ஆம். அநேக கோவில்களில் இலவச சாப்பாடு, ஏழை மக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. சில ‘தொண்டு நிறுவனங்களினாலும்’, இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இது போக, சில மருத்துவ நிறுவனங்கள் அவ்வப்போது, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள். இந்தச் சேவைகள் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எனவே, உண்மையிலேயே, இவைகள் ‘இலவசம்’ தான். இது தவிர, வேறு எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. விழாக்காலம் வந்தவுடன், ‘ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்’ என்று கூவிக் கூவி விற்கிறார்கள். இவை எல்லாம் நம்மை ஏமாற்றும் வியாபாரத் தந்திரங்களே. இதை வாங்கினால், ‘கரண்டி இலவசம்; இதை வாங்கினால், ‘டம்ளர்’ இலவசம். அவர்கள் கொடுக்கும் ‘இலவசப் பொருட்களின்’ விலையும் நாம் பணம் கொடுத்து வாங்கும் சாமானில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. நாம் ஏமாறத் தயாராக இருக்கும் போது, ஏமாற்றுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்? நாம் குடிக்கும் தண்ணீரே நமக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. இன்னும் சில வருடங்களில், நாம் சுவாசிக்கும் காற்றும் விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.  ஆனால், மிகவும் சுலபமாகவும், இலவசமாகவும், நாம் கேட்காமலேயே கிடைக்கக் கூடியது

Where is today's youth heading towards....?

Where is today's youth heading towards? They are brilliant and very skilled, compared to the earlier generation. No doubt about it. At the same time, some of the recent incidents make us worry. A girl (around 20 years of age) is killed in front of a big crowd of people by a stalker. This happened recently in Chennai (India). It seems that the boy was in love with the girl. But the girl did not reciprocate his love. And it is not necessary for 'someone' to love back, just because a person loves 'someone'. No one can make another person love some one, by force or constant nagging. Love is a 'natural feeling' of one person on the other. Now that the girl's marriage is fixed with someone-else, this boy got agitated. When the girl was waiting at the railway station to board a local train to go to her college, this boy (after an argument with the girl) suddenly pushed her on to the railway track, when a train was running on in the track. She died on the spot,

ரகசியம் யாரிடம் தங்குவதில்லை.... ஆண்களிடமா..., பெண்களிடமா.....?

பெண்களிடம் (பொதுவாக) ரகசியம் தங்குவதில்லை என்பது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு கூற்று. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ரகசியம் காக்கும் பெண்களையும் பார்க்கிறோம்; ரகசியம் காக்க முடியாமல் இருக்கும் ஆண்களையும் பார்க்கிறோம். என்னைப் பொருத்தவரை, இதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. ரகசியம் காப்பது என்பது, பாலினத்தைப் பொறுத்தது அல்ல என்பது எனது கருத்து. சரி...., இப்படி ஒரு பதிவு வரக் காரணமாக இருந்த ஒரு நிகழ்ச்சியை ‘மகாபாரதத்தில்’ பார்க்கிறோம். பாண்டவர்களின் தாயான குந்திதேவி, தங்கள் அரண்மனைக்கு வந்திருந்த துர்வாச முனிவருக்கு சிறப்பான பணிவிடை செய்கிறாள். அதனால் மகிழ்வுற்ற துர்வாச முனிவர் அவளுக்கு ஒரு வரம் அளிக்கிறார். அந்த வரம் என்னவெனில், ’தெய்வாம்சம் பொருந்திய எவரையும் மனதில் நினைத்து, முனிவர் சொல்லிக் கொடுத்த வரத்தை உச்சரித்தால், குந்திக்கு, அந்த தெய்வாம்சம் பொருந்திய மகன் பிறப்பான்’ என்பது. தனக்கு துர்வாச முனிவரால் அளிக்கப்பட்ட அந்த வரத்தை, பரிசோதித்துப் பார்க்கும் எண்ணத்துடன், சூரிய பகவானை மனதால் நினைத்து, தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட மந்திர