வாழ்க்கையின் சில ‘தர்மசங்கடமான’ வேலைகள்..., தருணங்கள்...
நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வேலைகளைச் செய்கிறோம் - பிரியப்பட்டோ, பிரியமில்லாமலோ...., தொழில்நிமித்தமாகவோ..., வேறு வழியே இல்லாமாலோ..., - இப்படி எத்தனையோ... அவ்வாறு செய்யும் போது சில தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சிலவற்றைப் பார்க்கலாம்.... ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருப்பது (அதுவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொறுப்பில் இருப்பது) மிகவும் தர்மசங்கடமான பொறுப்பு. அதுவும், கட்சித்தலைவர் சில சமயம் பொறுப்பின்றி ஏதாவது உளறி வைத்தால், அதை நியாப்படுத்தி பத்திரிகைகளுக்கும் மற்ற ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க வேண்டும். தலைவர் செய்த தவறை அவரிடம் சுட்டிக்காட்டவும் முடியாது (ஏனென்றால், அவர் கட்சியின் மிகப் பெரிய தலைவராக இருப்பார்). ‘மெகா சீரியல்’ எழுத்தாளர், மற்றும் இயக்குனர் வேலை மிகவும் கடினமானது. ‘கதை’ என்று ஒன்று இல்லாமலேயே சுமார் 2000 episodes (சுமார் 6 - லிருந்து 7 வருடம்) ஓட்ட வேண்டும். அதுவும், ஒவ்வொரு நாளும் (அதாவது சுமார் 20 நிமிடம் ஓடும் கதை(!)யை) episode முடியும் போது ஒரு suspense-ஓடு முடிக்க வேண்டும். அதாவது மறுநாள் ஒளிபரப்பாக இருக்கும் episode-ஐ மக்க...