கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்....
சமீபத்தில் ஒரு whatsapp செய்தி பார்த்தேன். ஒரு உல்லாசப் படகு, ஒரு விபத்தின் காரணமாக மூழ்கும் தறுவாயில் இருந்தது. எல்லோரும் அந்நேரத்தில் காப்பாற்றப் பயன்படும் சிறிய படகில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு ஆளுக்கு அந்தப் படகில் இடம் இருந்தது. ஆனால், காப்பாற்றபட ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். நேரம் தாமதிக்க இயலாத சூழ்நிலை; உடனே முடிவெடுத்தாக வேண்டும், யார் அந்தப் படகில் செல்வதென்று. சட்டென்று அந்தக் கணவன் படகில் ஏறினான். சற்று நேரத்தில் அந்த உல்லாசப் படகு மூழ்கி விட்டது (அந்த மனைவியுடன்). நாம் உடனே நினைப்பது, ‘இப்படி சுயநலக்காரக் கணவனாக இருக்கிறானே’ என்று தான். உண்மை அதுவல்ல. அந்தத் தம்பதிக்கு சிறு வயதில் ஒரு பென் குழந்தை இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அந்த மனைவி, குணப்படுத்த முடியாத நோயில் பாதிக்கப்பட்டிருப்பதும், கூடிய விரைவில் இறந்து விடுவார் என்றும் தெரிய வந்தது. இறக்கும் முன், கணவனுடன் ஒரு சிறிய உல்லாசப் பயணம் செல்ல முடிவெடுத்துத்தான் அந்தப் பயணம் மேற்கொண்டார்கள். கணவனுக்குப் பதிலாக மனைவி காப்பாற்றப்பட்டிருந்தால், கணவன் உல்லாசப் படகுடன் இறந்து போயிருப்பான். மனைவியும் சில ந...