வாழ்க்கை கடினமாக ஆகும் போது.....
வாழ்க்கை கடினமாக மாறும் போது, மன உறுதி உள்ளவர்கள், தடங்கல்களைத் தாண்டி வெற்றி பெறுகிறார்கள். இந்த ‘தீநுண்மி’ காலக்கட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எத்தனையோ பேர் மிகவும் கஷ்டமான நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். வாழ்வாதாரங்களை இழக்க நேரிட்டது. மன உறுதி இல்லாதவர்கள் ரொம்பவே சிரமப்பட்டார்கள். மற்றவர்களிடம் உதவி நாடி நின்றார்கள். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். ஆனால், அதே சமயம், மன உறுதி கொண்டவர்கள், அந்தத் தடங்கல்களைத் தாண்டி, தைரியமாக வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். இந்தக் காலக்கட்டம் முடிந்த பின் அவர்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவார்கள். பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்த ஒரு பேராசியருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டது; அதாவது அவர் 4 மாணவர்களை கல்லூரியில் சேர அழைத்து வர வேண்டும். பல பொறியியல் கல்லூரிகள் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் போது, அவர் எங்கிருந்து 4 மாணவர்களைக் கொண்டு வர முடியும். பார்த்தார்; வேலையை ராஜினாமா செய்து விட்டு, தனக்கு செய்யத் தெரிந்த ‘நொறுக்குத் தீனி’ ஒன்றை சிறிய அளவில் செய்து, அருகில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து, பின் அதற்கு வரவேற்பு அதிகம...