வாழ்க்கை குறித்த நமது மனப்பான்மை (attitude) எப்படி இருக்கிறது.....?
வாழ்க்கை குறித்த மனப்பான்மை (attitude towards life) ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறுபடக் கூடியது. எல்லோரும், ஒரே மனப்பான்மையில் வாழ்க்கையை அணுகுவதில்லை. ஏனெனில், வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள், கருத்துகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. 'எப்படியும் வாழலாம்' (நமக்கு ஆதாயம் இருக்கும் வரை)...., என்ற மனப்பான்மையுடன் சிலர்; 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று தங்களுக்குத் தாங்களே சில கோட்பாடுகளை வைத்து வாழ்பவர்களும் உண்டு. மற்றவர்களுக்கு, நம்மால் எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்று நினைத்து வாழ்பவர்கள் உண்டு; அதே சமயம், எனக்கு நல்லது நடக்கும் வரை, யாருக்கு எந்தப் பிரச்னை (என்னால் ஏற்பட்டாலும்) பரவாயில்லை என்று நினைப்பவர்களும் உண்டு. பொதுச் சொத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்று உறுதியோடு இருப்பவர்களும் உண்டு; என் சொத்து பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும்; எனக்கு மற்றதைப் பற்றிக் கவலையில்லை என்று எண்ணுபவர்களும் உண்டு. மற்றவர்களை ஏமாற்றினாலும் பரவயில்லை, நான் சுகமாக, வசதியாக வாழ வேண்டும் என்ற கொள்கை(!) உடையவர்களும் இருக்கிறார்கள். எல்லா ஜ...