நீங்கள் ‘ஜாடிக்கேற்ற மூடியா’ அல்லது ‘டாம் & ஜெர்ரியா’.....?

’திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ - இது சரியா? இன்றைய காலக்கட்டத்தில், திருமணங்கள், அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும், தெரு முனைகளிலும், பூங்காக்களிலும், ஏன் பள்ளிகளிலும் கூட நிச்சயிக்கப்படுகின்றன. இது தவிர்க்க முடியாத காலத்தின் மாற்றம். ஆனாலும், என்னைப் பொறுத்தவரை, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகத்தான் நம்புகிறேன். மேலே கூறப்பட்ட இடங்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதாகத் தோன்றினாலும், அதற்கான கரு சொர்க்கத்தில்தான் உருவாகிறது. இது கடவுளால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

திருமணம் என்பது ஒரு ‘கட்டமைப்பு’. இதை இன்றைய இளைய தலைமுறையினர் மதிப்பதில்லை. இதை ஒரு ‘சௌகரியமாகவே’ கருதுகின்றனர். இன்னும் சிலர், ‘திருமணம்’ என்ற பந்தத்திற்கு அவசியமே இல்லை என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு ஒருவரைப் பிடித்து விட்டதா, உடனே அவருடன் (எந்தப் பாலினமாக இருந்தாலும்) சேர்ந்து வாழ முடிவெடுக்கிறீர்கள். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலையில்லை. உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு விட்டதா; எந்தப் பிரச்னையும் இல்லை. 'நீ உன் வழியே போ; நான் என் வழியே போகிறேன்'. ரொம்பவே சுலபம்! இதனால் (சேர்ந்து வாழ்ந்து, பிறகு பிரிந்து செல்வது) ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. ஒரு வேளை சேர்ந்து வாழும் சமயத்தில் குழந்தை பிறந்தால், பிரிந்த பின், குழந்தையின் நிலை என்ன? குழந்தை வளரும் சமயத்தில், அதனுடைய மனநிலை என்னவாக இருக்கும்? இதற்கு யார் பொறுப்பு? எதைப் பற்றியும் கவலை இல்லை. தனது சௌகரியம், தனது சந்தோஷம் - இவைதான் முக்கியம். என்ன ஒரு மனப்பான்மை....?

நீங்கள் ‘ஜாடிக்கேற்ற மூடியா’ (இல்லையா...) என்பது உங்கள் இருவரை மட்டுமே பொறுத்தது. உலகில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி. நாம் வளர்க்கப்பட்ட விதம், நமது பொருளாதார பின்னணி, நாம் சார்ந்திருக்கும் சமூகம் இவையெல்லாவற்றையும் பொருத்து நமது குணங்கள் உருவாகின்றன. ஒவ்வொருவருக்கும் நிறையும் உண்டு; குறையும் உண்டு. ஒருவரின் குறையையும், நிறையையும் முழுவதுமாக ஒத்துக் கொண்டு அதன்படி மற்றவர் நடப்பதில்தான், திருமணத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போக வேண்டும். தவறு கண்டுபிடிப்பதனால், பிரச்னைகள்தான் வளரும். வெற்றிகரமான திருமண பந்தத்திற்கு இது ஒன்றுதான் வழி....

ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகாததால், நிறைய ஜோடிகள் விவாக ரத்திற்காக நீதிமன்ற வாசலில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இப்படியே போனால், விவாக ரத்து வழங்குவதற்கென்றே நிறைய நீதிமன்றங்கள் திறக்கப்பட வேண்டியதிருக்கும். இன்று ’திருமண ஆலோசகர்கள்’ பெருத்து விட்டனர். நமது குறை, நிறைகள், நமக்குத் தெரியாத அளவுக்கு நாம் புத்தி இல்லாதவர்கள் அல்லவே. பின் ஏன் நாம் திருமண ஆலோசகர்களைத் தேடிப் போக வேண்டும்? அமைதியாக உட்கார்ந்து, நாம் சந்தோஷமாக இருந்த நாட்களைப் பேசி அசை போட்டாலே, போதுமே! சில மாற்றங்கள், சில திருத்தங்கள் நமக்குள் செய்து கொண்டாலே போதும், மீண்டும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்ல..... நமக்குள் ‘உள்ளார்ந்த காதல்’ இருக்கும் வரை, திருமண வாழ்க்கை சொர்க்கமாகவே இருக்கும். வாழ்த்துக்கள்....

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), Made for each other OR mad after each other...? என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் பதிவேற்றம் செய்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?