சிகரத்தை அடைந்தால்......., வானத்தில் ஏறு....

நம் எல்லோருக்குமே, வாழ்வில் ஒரு உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும், சிலரைத் தவிர.... எது நம்மை அந்த இலக்கை நோக்கி உந்தித் தள்ளுகிறது? ‘அந்தக் குறிக்கோளை நோக்கிய ’வேட்கை’. அந்த ‘வேட்கை’ இல்லாமல், நமது இலக்கை அடைய முடியாது. அடுத்து, இலக்கை அடையத் தேவை, ‘மனம் ஒன்றிய கூரிய அர்ப்பணிப்பு’. எது வந்தாலும், அந்தத் தடையை மீறி செயல்படக்கூடிய மன உறுதி. வழியில் எத்தனையோ (எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காததுமான) குறுக்கீடுகள் நேரலாம். அவை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற மனப்பாங்குடன் வெற்றி கொள்ள வேண்டும். இவைகளுடன், கடவுளின் அருளும் இருந்தால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.

இலக்கை அடைவதற்கான முழு முயற்சிக்கு ஒரு உதாரணம் சொல்லப்படுவதுண்டு. ஜப்பானியர்களுக்கு, தங்களுக்கு மிகவும் பிடித்த உணவான மீனை மிகவும் fresh-ஆக (அப்போதுதான் பிடித்த நிலையில்) உண்ணவே பிடிக்கும். கடலின் கரையோரங்களில் மீன் கிடைப்பது குறைந்தபடியால், கடலின் உள்ளே வெகு தூரம் சென்று மீன் பிடிக்க வேண்டிய நிலை உருவானது. எனவே, பிடித்த மீனை கரைக்குக் கொண்டு வந்து விற்கும் போது அவை அநேகமாக இறக்கும் தருவாயில் இருக்கும். இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, குளிர்வூட்டப்பட்ட நிலையில் (refrigerated), கரைக்குக் கொண்டு வந்தார்கள். அப்படியும் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கவில்லை. Fresh-ஆகக் கொண்டு வர என்ன செய்யலாம் என்ற ஒரே சிந்தனையில் ஆழ்ந்த அவர்கள் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள். பிடித்த மீன்களை, ஒரு பெரிய கடல் நீர்த் தொட்டியில் விட்டார்கள். கூடவே ஒரு சின்ன சுறா மீனை (shark) அந்தத் தொட்டியில் விட்டார்கள். அந்த சுறா மீன், அந்த மீன்களை விரட்ட விரட்ட, அவை மிகவும் சுறுசுறுப்பாகவும் fresh-ஆகவும் கரை வந்து சேரும் வரை இருந்தன. சில மீன்கள் சுறாவுக்கு இரையானாலும் மீதம் இருக்கும் அதிகப்படியான மீன்கள் அப்போதுதான் கடலில் பிடித்தது போன்ற நிலையில் இருந்தன. இதுதான் அந்த உத்தி. தனது இலக்கு அடையும் வரை விடுவது இல்லை.

பெரிய தொழிலதிபர்கள், அவர்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றாலும், மேலும் மேலும் புதிய தொழில்கள் தொடங்குவதன் நோக்கம் அதுதான். அவர்கள் ஒரு வெற்றியோடு நிற்பதில்லை. மேலும் மேலும் பல இலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றை அடைய கடுமையாக உழைப்பார்கள். ஒன்று வெற்றியடைந்ததும், அடுத்த இலக்கு.... இது போய்க் கொண்டே இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் ஓடிக்கொண்டே இருந்தால் தான் ஒரே இடத்தில் நிற்க முடியும்; இல்லையெனில், நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம். அதே சமயம், ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாட வேண்டும்; மகிழ்ச்சியடைய வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சியே பெரிய வெற்றி; வாழ்க்கையின் இலக்கு. தோல்வி அடைந்தால், அதற்காகக் கவலைப்படாமல், தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடுத்து, அதிலிருந்து நல்ல ஒரு பாடத்தைக் கற்று, அதை அடுத்த வெற்றிக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த இலக்கை அடையும் விஷயத்தில் ‘போதும் என்ற மனம்’ (complacency) கூடாது. இதுவே வெற்றிக்குப் பெரிய முட்டுக்கட்டை.

ஒரு சினிமா பாடல் (படையப்பா என்ற சினிமா) வரிகள் - ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு...., சிகரத்தை அடைந்தால், வானத்தில் ஏறு....’). இதையே நாம் கொள்கையாக, வாழ்க்கை லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டில் ‘உயரம் தாண்டுதல்’ ‘pole vault' போன்ற விளையாட்டுக்களில், ஒரு உயரத்தைத் தாண்டியதும், அடுத்த அதிக அளவிலான உயரத்தைத் தாண்ட முயற்சிப்பார்கள். இத்ற்கு முடிவே கிடையாது. ‘இலக்கை கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும்’. இப்படி எவ்வளவோ ‘உச்ச எல்லைகள்’ (records) முறியடிக்கப்பட்டிருக்கின்றன. ’வானமே எல்லை’ என்பதையும் மீறி, மேலே மேலே செல்ல முயற்சிக்க வேண்டும். வாழ்த்துக்கள்,

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site) பதிவேற்றம் (upload) செய்திருந்த ’Keep raising the bar.... Aim for the sky...' என்ற வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் பதிவேற்றம் செய்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?