எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 14

கிருஷ்ணர் : கிராமீய வாழ்க்கையின் அழகைப் பேசத்தானே ஆரம்பித்தோம்…. எவ்வளவு பெரிய இலக்கியங்கள் இங்கிருந்து பிறந்திருக்கிறது…. யப்பா….

மேகலா : இது ஊத்துத்தண்ணி கிருஷ்ணா…. தோண்டத் தோண்ட ஊத்துத்தண்ணி பெருகத்தானே செய்யும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…, கிராம மக்கள் நடை, உடை என்று எதுகைக்காகச் சொன்னாயோ தெரியவில்லை. ஆனால், கிராம மக்களின் costume பற்றி நீயும் தெரிந்து வைத்திருப்பாய். ஆண்கள் என்றால், இடுப்பில் ஒரு வேஷ்டி…, தோளில் ஒரு துண்டு… பெண்கள் என்றால், ஒன்பது கெஜம் சேலை.., அதுவும் பின்கொசுவம் வைத்து கட்டப்படும் சேலை…. Blouse-லாம் கிடையாது…

கிருஷ்ணர் : அப்படியா…. ஆண்களுக்கான costume நான் அறிந்தது தான். என்னுடைய costume-மும் அதுதானே… பெண்களின் உடையைப் பற்றிச் சொல்லு மேகலா; நான் தெரிந்து கொள்கிறேன்…

மேகலா : ஒரு விவசாயி, வேஷ்டி மட்டும் தான் கட்டுவான். பண்ணையம் பார்க்கும் போது, துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொள்வான். வேட்டியை மடித்து தார்ப்பாச்சிக் கட்டுவான் என்பது எதற்காக…. இந்த வெய்யிலில் வேலை செய்யும் போது, சட்டையெல்லாம் தேவையில்லை. மண்ணோடு மண்ணாக உறவாடும் போது, சட்டை கசங்கி மண்ணாகி விடும் என்பதால்தானே சட்டையே போடுவதில்லை… அப்போ, விவசாயி கூட, களத்து வேலை செய்யும் விவசாயினி கூட, சேலை….

கிருஷ்ணர் : Stop…. stop….. அது யாரு ‘விவசாயினி’….?

மேகலா : விவசாயிக்குப் பெண்பால் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஐயே…. சகிக்கல…. ‘விவசாயி’ என்பது, ஆண் பெண் இருவருக்கும் பொதுவான வார்த்தை…. யார் விவசாயம் பார்க்கிறார்களோ, அவர்கள் ’விவசாயி’…. ‘டீச்சர்’ என்பது மாதிரி…

மேகலா : நீங்க சொன்னா…, சரி, ‘boss’. விவசாயம் பார்க்கும் பெண்களும், தட்ப வெப்பம் கருதி, சட்டை போட மாட்டார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! அப்படீன்னா, அந்தக் காலங்களில், கிராமத்தில் இருப்பவர்களுக்கு, சட்டை தைக்கத் தேவையில்லை…. Tailor-க்கு stitching charge கொடுக்கத் தேவையில்லை….

மேகலா : என்ன கிருஷ்ணா…. என்னச் சொல்லிட்டு…, நீயே route மாறிப் பேசுற…. ‘இது ரொம்ப முக்கியமா’…. நீ சொன்ன மாதிரி, விவசாயம் பார்க்காதவர்கள், பின்கொசுவம் வைத்துக் கட்டிய சேலையும், ஜன்னல், கதவு எதுவும் இல்லாத…., ஏன், cross cut கூட இல்லாத சட்டை அணிந்திருப்பார்கள். அது சேலைக்குப் பொருத்தமாக இருக்கணும் என்பது முக்கியமில்லை…

கிருஷ்ணர் : மொத்தத்தில் dress மீது பெரிய ஆர்வம் கிடையாது…. சரி, dress தான் இப்படி….. நகை அணிவது…. எப்படி? எந்த மாதிரி நகை அணிவார்கள்…..

மேகலா : எனக்குத் தெரிஞ்சி, ஆண்கள் மோதிரம் தவிர வேறு நகைகள் அணிய மாட்டார்கள். கழுத்திலோ, கை முஷ்டியிலோ…., தாயத்து கட்டி இருப்பார்கள். அது, சிலர் தங்கத்திலும் போட்டிருப்பார்கள். ஆனாலும், இது கட்டாயமில்லை…. பெண்களின் நகைகளில் தான் சுவாரஸ்யமே இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! என்ன…. necklace, ஒட்டியாணம் என்று விதவிதமாக நகையைப் போட்டிருப்பார்களா…?

மேகலா : மற்ற நகைகளைப் பிறகு பார்ப்போம். எங்க ஐயாமா, காது வளர்த்து ‘தண்டட்டி’ போட்டிருப்பாங்க கிருஷ்ணா…

கிருஷ்ணர் : தண்டட்டியா….. அப்படீன்னா….?

மேகலா : இதை ’பாம்படம்’ என்றும் சொல்வார்கள் கிருஷ்ணா… கடா, கங்கணம் மாதிரியான வளையல்களில், கீல் மாதிரி வைத்து, screw-வால் திறந்து மாட்டுவார்களே…, அது மாதிரி, இந்த தண்டட்டியிலும் ஒரு ‘கீல்’ இருக்கும் கிருஷ்ணா…. முன்பகுதியில் ஒரு screw இருக்கும். அதை open பண்ணும் போது, தண்டட்டி திறந்து நிற்கும். மேல்பகுதி அழகாக உருண்டு வளைந்து இருக்கும். கீழ்பகுதி, பொற்கொல்லரின் கற்பனைப்படி, சதுர கோணங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதைக் காதில் மாட்டி, screw-வை திருகி விட்டால், தண்டட்டி வளைந்து நிற்கும் காதுகளில் ஊஞ்சலாடும் கிருஷ்ணா! அந்த screw பொருந்தும் இடத்தில், சிவப்பு, பச்சைக் கற்களைப் பதித்து, தண்டட்டியை மேலும் அழகாக்கியிருப்பார்கள். இந்த காதணி மட்டும் போதும் கிருஷ்ணா…. நிறைய நகைகள் போட்ட மாதிரி இருக்கும் கிருஷ்ணா…. எங்க ஐயாமா, காது நிறைய தண்டட்டி போட்டு, காதுக்கு மேல் மடல் பகுதியில், ‘கொப்பு’ என்று சொல்லப்படும் ‘திருகாணி’ மாதிரியான ஒரு நகையை அணிந்திருப்பார்கள்.

கிருஷ்ணர் : இதுக்கென்று special-ஆக காது வளர்ப்பார்களா மேகலா…. வீட்டுல எல்லோரும் காது வளர்ப்பார்களா….

மேகலா : எல்லோரும் காது வளர்க்க மாட்டாங்க கிருஷ்ணா…. ஆனா, வீட்டுக்கு ஒருவராவது, தண்டட்டி அணிய விரும்புபவர்கள், காது வளர்த்திருப்பார்கள். என் வீட்டுக்காரருடைய ஐயாமையும் காது வளர்த்து, தண்டட்டி போட்டிருந்தாங்க கிருஷ்ணா… அந்த நகையை அணிந்து, அந்தக் காதை ஆட்டி, ஆட்டிப் பேசும் போது, தண்டட்டி துள்ளித் துள்ளி ஆடும் அழகு இருக்கே…. ஆஹா…..

கிருஷ்ணர் : ஐயோ…. அப்போ காது வலிக்காதா… ? அது கனமா இருக்குமோ….?

மேகலா : கனமா இருக்குமாண்ணு தெரியல கிருஷ்ணா…. ஆனா, தங்கம் சும்மா… 8 gm…, 10 gm-க்குள்ளதான் இருக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ, மேல்பகுதி, கீழ்பகுதி என்று விவரிக்கும் போது, 2 பவுண் இருக்கும் என்று நினைத்தேன்..

மேகலா : கிருஷ்ணா… பார்ப்பதற்கு பெரிய நகையாகத்தான் இருக்கும் கிருஷ்ணா… தண்டட்டி வெறும் கூடாகத்தான் இருக்கும் கிருஷ்ணா…. உள்ளுக்குள் அரக்கு வைத்திருப்பார்கள். நான் நினைக்கிறேன்…, அரக்கினால் தண்டட்டியை வடிவமைத்து விட்டு, தங்கத் தகடை, அதன் மேல் பொருத்தி விடுவார்கள் போல கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : தகடா….!

(தொடரும்)

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?