’தகவல் தொடர்பு’ என்னும் கலை (art)

மனிதன், எப்போது இந்த உலகில் தோன்றி வாழ ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து, ஒருவருக்கொருவர் தங்கள் சிந்தனைகளைப் பரிமாறும் அவசியம் ஏற்பட்டிருக்கும். மொழி என்ற ஒன்று இல்லாத பட்சத்தில், சைகைகளினால் மட்டுமே தங்கள் எண்ணங்களைப் பரிமாறியிருப்பார்கள். அது போக, ‘உடல் மொழி’ (body language), ரொம்பவே உதவியிருக்கும். முகம் (குறிப்பாக கண்கள்) நவரசங்களையும் பிரதிபலிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. உலகின் மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் (the one and only legend) இதை மிகவும் அருமையாக ‘நவராத்திரி’ என்ற சினிமாவில் காட்டி விட்டார்.

மொழி தோன்றிய பிறகு, ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டு வந்தன. Google-ன் தகவல்படி, தற்போது 6,500 மொழிகள் உலகில் இருக்கின்றன. ஆனால், இவற்றில் சில மொழிகள் பேச்சு வழக்கில் இப்போது இல்லை. மொழி தோன்றிய பின் தகவல் தொடர்பு மிகவும் சுலபமாக ஆகி விட்டது. ஆனாலும், ‘மௌனம்’ என்பது, மிகவும் சக்தி வாய்ந்த மொழி. இது எல்லா உணர்வுகளையும், அந்த அந்த சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் வெளிப்படுத்தக்கூடியது. எங்களது அப்பா, மௌனமாக இருந்தால், கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம்.

வீட்டிலோ, வெளியிலோ நமக்குண்டான உறவு பலப்படுவதும், பலவீனப்பட்டுப் போவதும், நாம் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பொறுத்தது. சரியான வகையில் பேசுவது தொழிலிலும், வியாபாரத்திலும் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில தவறான வார்த்தைப் பிரயோகங்களினால், சில வியாபாரங்கள் முறிந்து போவதக் காண்கிறோம். குடும்ப உறவுகள் பிரிந்து போவதையும் தினமும் பார்க்கிறோம்.

Word is mightier than the sword - என்பது பழமொழி. திருவள்ளுவர் மிகவும் அருமையாக இந்தக் கருத்தைப் புரிய வைக்கிறர்.

“தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்

ஆறாதே நாவினாற் சுட்ட வடு” - குறள் 129

இனிமையான சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று கீழ்க்காணும் குறளில் பதிவு செய்திருக்கிறார்.

”இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று” - குறள் 100

நமக்குத் தெரிந்து எத்தனையோ பேச்சாளர்கள் (powerful orators) தங்களது பேச்சுத் திறமையினால், மிகப் பெரிய தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள். தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்தை, கேட்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் பேசக்கூடியவர்கள் அவர்கள்.

நாடுகளுக்கிடையே நியமிக்கப்படும் தூதுவர்கள், இந்த விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் சில சந்தர்ப்பங்களில், ‘சரி’ என்று சொல்வார்களே தவிர, அந்த சந்தர்ப்பத்தில், அதன் உண்மையான அர்த்தம், ‘இல்லை’ என்பதாகும். அவ்வளவு திறமையாக பேசுவார்கள்.

உலகம் எவ்வளவோ திறமையான எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் பார்த்திருக்கிறது. எல்லா மொழிகளிலும் இவர்களைச் சந்திக்கலாம். ஆத்திசூடி’ எழுதிய ஔவையாரை விட யாரால், சுருங்கச் சொல்லி விளக்க முடியும். திருக்குறளுக்கு நிகர் இந்த உலகில் வேறு ஏதாவது உண்டா என்பது சந்தேகமே.... மகாகவி பாரதியைப் போல், தனது எழுத்தால், நாட்டு மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தியது வேறு யார்? “To be or not to be", "To be kind, I have to be cruel" - இவை ஷேக்‌ஷ்பியரின் மறக்க முடியாத சொற்றொடர்கள். "I have a dream" - இது Martin Luther King-ன் மறக்க முடியாத வாக்கியம். “Words are the voice of the heart" என்றார் சீன அறிஞர் Confucius. "Men may come and men may go, but I go on forever" - Alfred, Lord Tennyson's poem "The Brook".

ஒரு மேலதிகாரி, கனிவான வார்த்தைகளால், தனக்குக் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் சாதிக்க முடிந்ததை, எந்தக் கண்டிப்பினாலும் பெற இயலாது. இதை, நாம் எல்லோரும் கண்கூடாக எல்லா இடங்களிலும் தினமும் பார்க்கலாம்.

இன்று whatsapp போன்ற தளங்களில், சில இளைஞர்கள் உபயோகப்படுத்தும் சில சுருக்குச் சொற்கள் DIY, GWS, BTW, SYS...... இப்படிப் பல - என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. தகவல் பரிமாற்றம் என்பது ஒரு கலை. அதைச் சிதைக்க வேண்டாமே....

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?