’இலவசம்’ என்று ஏதாவது இருக்கிறதா....?

ஆம். அநேக கோவில்களில் இலவச சாப்பாடு, ஏழை மக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. சில ‘தொண்டு நிறுவனங்களினாலும்’, இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இது போக, சில மருத்துவ நிறுவனங்கள் அவ்வப்போது, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள். இந்தச் சேவைகள் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எனவே, உண்மையிலேயே, இவைகள் ‘இலவசம்’ தான்.

இது தவிர, வேறு எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. விழாக்காலம் வந்தவுடன், ‘ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்’ என்று கூவிக் கூவி விற்கிறார்கள். இவை எல்லாம் நம்மை ஏமாற்றும் வியாபாரத் தந்திரங்களே. இதை வாங்கினால், ‘கரண்டி இலவசம்; இதை வாங்கினால், ‘டம்ளர்’ இலவசம். அவர்கள் கொடுக்கும் ‘இலவசப் பொருட்களின்’ விலையும் நாம் பணம் கொடுத்து வாங்கும் சாமானில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. நாம் ஏமாறத் தயாராக இருக்கும் போது, ஏமாற்றுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்?

நாம் குடிக்கும் தண்ணீரே நமக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. இன்னும் சில வருடங்களில், நாம் சுவாசிக்கும் காற்றும் விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும். 

ஆனால், மிகவும் சுலபமாகவும், இலவசமாகவும், நாம் கேட்காமலேயே கிடைக்கக் கூடியதும் என்ன தெரியுமா? ‘அறிவுரை’. இதை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வழங்கத் தயாராக இருப்பார்கள். அநேகமாக அந்த அறிவுரை நமக்கு பாதகமாகவே இருக்கும். சமீபத்தில் ஒரு video clipping பார்த்தேன். ஒரு நண்பர் ஒரு office meeting-கிற்குச் செல்ல suit அணிந்து, நண்பரிடம் ’எப்படி இருக்கிறது’ என்று கேட்கிறார். ‘நீ office meeting-கிற்குத்தானே செல்கிறாய். பெரிய CEO மாதிரி உடை எதற்கு’? சரி என்று அவர் casual dress அணிந்து வருகிறார். ‘நீ என்ன shopping செல்கிறாயா’? உள்ளே சென்று கருப்பு கலரில் உடை அணிந்து வருகிறார். ‘நீ என்ன ஏதாவது துக்க நிகழ்ச்சிக்குப் போகிறாயா’? நண்பர், இப்போது, வெள்ளை dress அணிந்து வருகிறார். ‘நீ என்ன அரசியல்வாதியா’? இப்போது, shorts-ம், T-shirt-ம் அணிந்து வருகிறார். ‘இது perfect ஆக இருக்கிறது. ஆனால், நீ ஏதோ company meeting-கிற்குப் போவதாகச் சொன்னாயே. ஏன் suit அணிந்து செல்லக் கூடாது’? எப்படி இருக்கும் நண்பருக்கு. இதுதான் நமக்கு அறிவுரை சொல்பவர்களின் பேச்சைக் கேட்டால் நமக்கு ஏற்படக் கூடிய பரிதாப நிலை.

சில மாதங்களுக்கு முன் நாம் எல்லோரும் ‘corona virus' பயத்தால் நடமாடிக் கொண்டிருக்கும் போது, போவோர் வருவோர் எல்லாம் நமக்கு வழங்கிய அறிவுரைகளை மறக்க முடியுமா? ஒருவர் கொஞ்சம் பருமனாக இருந்து விட்டால் போதும்; ஆளாளுக்கு அவருக்கு இலவசமாக பல அறிவுரைகளை (diet, gym, jogging....) வழங்குவார்கள். ஏதோ அந்த நபருக்கு அதெல்லாம் தெரியாதது மாதிரியும், அறிவுரை சொல்பவர் ஏதோ expert மாதிரியும் நினைத்துக் கொள்வார். தெரிந்தவர்களில் யாருக்காவது, திருமணமாகி ஒரு வருடம் கழித்தும் குழந்தை இல்லை என்றால், தெரிந்தவன், தெரியாதவன் எல்லோரும் வழங்கும் ஆலோசனைகள் இருக்கிறதே..... அந்தத் தம்பதியின் மனநிலையைப் பற்றியோ, இவர்களது அறிவுரை எந்த அளவுக்கு உளரீதியாக அவர்களை பாதிக்கும் என்றோ கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால் ஒழிய யாருக்கும் அறிவுரை வழங்காதீர்கள். அதையும் ஒரு ஆலோசனையாக (suggestion) கூறுங்கள். முடிவு எப்போதும் சம்பந்தப்பட்டவர்களோடதாகத்தான் இருக்க வேண்டும். ஒருவேளை நாம் கொடுக்கும் ஆலோசனையை அவர் ஏற்று அவர் நடந்தாலும், அதனால் வரும் நன்மையோ தீமையோ, அந்த நபரையே அது சேரும். ஏனென்றால், முடிவெடுப்பது சம்பந்தப்பட்டவர் தான். ’சும்மா சொல்லி வைப்போமே’ என்று நினைக்காமல், கேட்காமல் யாருக்கும் அறிவுரை கூறாதிருப்போமாக....

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?