அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 2

மேகலா : ஒரு வகையில் அது உண்மைதானே கிருஷ்ணா…. கூப்பிடு தூர இடத்திற்கு நடந்து செல்வது எப்படி….? வாகனத்தில் செல்வது எப்படி….? Doctors மெனக்கெட்டு, தினமும் 1/2 மணி நேரம் walking போங்க… என்று இன்றைக்கு சொல்லப்படாத மனுஷங்களே கிடையாது. நாம் நடப்பதற்கு doctors advice பண்ண வேண்டியிருக்கு….

கிருஷ்ணர் : அன்றைக்கு, தூரம் காரணமாக 1 வாரம் இழுத்தடிக்கும் வேலையை இன்றைக்கு ரெண்டே நாளில் முடிச்சிருவாங்கல்ல. மனுஷங்களுக்கு time consume ஆகுதுல… பணப் புழக்கம் அதிகரிக்கும் வித்தையைத் தெரிந்து கொண்டானல்லவா… அப்போ…., வேகமாகச் செல்லுதல் என்பது முக்கியம் அல்லவா….

மேகலா : வேகம்…, வேகம்…, என்று பேசுபவர்கள், ஆரோக்கியத்தைப் பற்றியே யோசிப்பதேயில்லையே கிருஷ்ணா…. Walking மட்டுமல்ல கிருஷ்ணா… அந்தக் காலத்துல தானியத்தை powder பண்ணுவதற்கு உரலில் இடிப்பாங்க… அதனால், தோள்பட்டை, கைகள் இவைகளுக்கு exercise இருந்தது…, உண்ட சோறும் செரித்தது. இன்று உடனே mixie-யில் போட்டு powder பண்ணி, பலகாரம் செய்து சாப்பிடுவதால், உடம்பின் பாகங்களுக்கு exercise-ம் இல்லை…, extra சாப்பிடுவதால்…, fat-ம் சேர்கிறது. இது மாதிரி kitchen உபகரணங்களில், grinder, washing machine எல்லாம் நம்மை சோம்பேறியாக்கி, உடம்பின் பாகங்களுக்கு எந்த வித exercise-ம் இல்லாமல் இருப்பதுதான் technology உலகம் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : நீ சோம்பேறி உலகம் என்கிறாய்…. Grinder, mixie எல்லாம் இருப்பதனால்தான், வகை வகையான சாப்பாடு தினந்தோறும் சாப்பிட முடிகிறது. அந்தக் காலங்களில், காலையில் நீராகாரம், கேப்பக்கழி, என்று ஏதோ ஒரு நாள் செய்யும் கழியைத்தானே, இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட முடிந்தது…. ஆனால், இப்பப் பார்…. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று yummy-யாக சாப்பிட முடியுதுல… அதனால், என்னோட ‘வோட்’ இந்தக் காலத்திற்குத்தான்…. ஆனாலும் இன்றைய தலைமுறையினர் ‘ஜிம்’முக்குலாம் போய், exercise பண்ணி, தன் உடம்பின் ஆரோக்யத்தின் மீது அக்கறையாகத்தானே இருக்காங்க….

மேகலா : ஏன் கிருஷ்ணா…. அந்தக் காலத்தில் ஜிம்முக்குப் போகாமலேயே ஆரோக்யமா இருந்தாங்கன்னு சொல்றேன்…. நீ கிண்டல் பண்றயா….

கிருஷ்ணர் : சே…. சே…. நான் கிண்டலெல்லாம் பண்ணல…. உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது… அதனோடு நாமும் வேகமாக வளர வேண்டும்…. Slow-வானால், வேகமானவன், நம்மை விட முந்திச் சென்று விடுவான்…. அதனால், எதிலும் fast…., fast….., food-ல் கூட fast food…. சப்பாத்தியைக் கூட பிய்த்துச் சாப்பிடுவதை விட, vegetables-ஐ உள்ளே வைத்து சுருட்டிக் கொடுத்தால், வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வேலையைப் பார்க்கலாம். அதனால், உடம்பின் மீது அக்கறையில்லாமல் இருப்பதில்லையே…. நேரம் கிடைக்கும் போது, ஜிம்முக்குப் போய், work-out பண்ணினால் ஆரோக்யம் தன்னால வருது…..

மேகலா : கிருஷ்ணா…, நீ சாப்பாடைப் பற்றிப் பேசும் போது தான், இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. கழி, கூழ், புட்டு கூட வேண்டாம்… இட்லி, தோசை, சாதம் இதைக் கூட விட்டுட்டு, ‘corn flakes’-னு ஒரு food…. கோழிக்கு தவிடு வைப்பது மாதிரியே இருக்கும். ஒரு கிண்ணத்தில் corn flakes-ஐப் போட்டு, பாலை ஊற்றிக் கொடுப்பாங்க…. இதுதான் morning breakfast. இது மட்டுமல்ல…. பன்னீர், corn, onion, capsicum – இதையெல்லாம் வெட்டிப் போட்டு, oven-ல bake பண்ணின pizza என்ற ரொட்டி, ரெண்டு bread-களுக்கிடையில் ஒரு chicken துண்டு, கொஞ்சம் sauce ஊற்றி, burger-ங்கிற பெயரில் ஒரு ரொட்டி… இதெல்லாம் இன்று இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள முக்கியமான உணவு கிருஷ்ணா…. தலைவாழையிலையை விரித்து, நீர் தெளித்து, ஒர் ஓரமாய் கொஞ்சம் உப்பு வைத்து, சாதம், பருப்பு, சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் என்று அறுசுவை உணவு சாப்பிடுவது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத சாப்பாட்டு முறையாகி விட்டது கிருஷ்ணா… தைப்பொங்கல் அன்று கூட வாழையிலையில் சாப்பிடும் பழக்கம் மக்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. நீ என்னடாண்ணா, சப்பாத்தியைச் சுருட்டி, கையில் பிடித்து சாப்பிட்டுக் கொண்டே செல்லலாம் என்கிறாய்…. என்னதான் சொல்லு….’அந்தக் காலம்’ அந்தக் காலம் தான் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : இப்ப உனக்கு என்னதான் பிரச்னை… Social media-லாம் நீ பார்ப்பதில்லையா… வாழையிலையில் போட்டு வேக வைப்பதன் மகத்துவத்தை எடுத்துச் சொல்லியிருக்காங்க… அதைப் பார்த்து நம்ம பிள்ளைகளும்…., மீன் பொழிச்சது, புட்டு, கொழக்கட்டை என்று தெரிஞ்சிக்கிறாங்கல்ல… இப்போ, புதுசா புரோட்டா கூட வாழையிலையில் கட்டி, தோசைச் சட்டியில் போடுவதை காட்டுறாங்களே…

மேகலா : ஏன் கிருஷ்ணா…., வீட்டில் பெரியவங்க சொன்னதைக் கேட்காத இன்றைய தலைமுறையினர்…, social media-வில் என்ன செஞ்சாலும் வீட்டில் அதகளப்படுத்துறாங்க…. simple, இலையைப் போட்டு சாப்பிடுவதை விட்டு…, இலையில் கட்டுவாங்களாம்…, அதை எண்ணெயில் போடுவாங்களாம்…, சாப்பிடுவாங்களாம்…. யாரோ சொன்னால், ‘லைக்’ போடுறவங்க…, நல்ல நாள் அன்றாவது வாழையிலையில் சாப்பிடலாம் என்றால் கேட்க மாட்டாங்க….

கிருஷ்ணர் : ஏன்…. வாழையிலையில் சாப்பிடுவது நல்லது என்று யாரோ ஒருவர் வழி காட்டினால்…, அதையும் குற்றம் சொல்லுகிறாய்… எப்படியாகிலும், வாழையிலையின் பலன்களைப் பயன்படுத்துகிறார்களா இல்லையா…. அந்தக் காலங்களில், நம்ம குடும்பம், நம்ம உறவு என்று மட்டுமே இருந்தவர்கள்…, இன்று உலக மக்கள் அனைவருடனும் தொடர்பு கொள்கிறார்கள்… உணவுப் பழக்கத்திலிருந்து, படித்தது, பிடித்தது, சுவாசித்தது அனைத்தையும் share பண்ணுகிறார்கள்… பார்ப்பவருக்கும் பிடித்திருந்தால், ‘லைக்’ போடுகிறார்கள்… ‘இந்தக் காலம்’ தான் best…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?