அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 6
மேகலா : தெரியும் கிருஷ்ணா.... பி. டி. உஷா என்னும் தங்கமகளைத் தெரியாதவர் இந்த இந்தியாவிலேயே கிடையாதுல கிருஷ்ணா...
கிருஷ்ணர் : இந்தத் தங்கமகளின் கால்கள் மான் மாதிரி வேகம் காட்டுவது என்று கண்டுபிடித்தது யார்.... அவருக்கு முறையாகப் பயிற்சி கொடுத்தால், உலக அளவில் ஓட்டப் பந்தயத்தில் சிகரம் தொடுவார் என்று கணித்தது யார்.... அவராகப் பயிற்சி எடுத்திருந்தால், தங்கமகளாக முடியுமா....
மேகலா : நீ சொல்றது correct கிருஷ்ணா.... அவருடைய coach O. M. நம்பியாரின் தீவிரமான coaching-தான், P. T. உஷாவின் வெற்றிக்குக் காரணமாகியது... அந்த ஆண்டு அவருக்கு சிறந்த பயிற்சியாளருக்கான ‘துரோணாச்சாரியார்’ அவார்டும் கிடைத்தது.... இந்த வீராங்கனைக்கு மட்டுமல்ல கிருஷ்ணா... ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் அவரவர் திறமைகளை வெளிக்கொணர்வது அவங்களோட coach தான் என்பதில் சந்தேகமே கிடையாது கிருஷ்ணா....
கிருஷ்ணர் : நான் சொன்னது சரியாப் போச்சா.... அந்தக் காலம், இந்தக் காலம், எந்தக் காலமானாலும் மாணவர்களின் திறமை மீது அசாத்திய நம்பிக்கையும்...., அதை வெளிக்கொணர்வதில் தீவிர முனைப்பும் கொண்டவர் தான் ஆசிரியர்.... இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்... விதிவிலக்கு இல்லாத துறையே கிடையாது. ஆனாலும், ஆசிரியரின் அக்கறையும், முயற்சியும் தான் மாணவர்களின் பேராற்றலை உலகுக்குக் காட்டுகிறது என்பது எக்காலத்திலும் நிரூபிக்கப்பட்ட உண்மை... இப்பச் சொல்லு... ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான உறவில் best, அந்தக் காலமா...., இந்தக் காலமா....
மேகலா : எல்லாக் காலமும் தான் கிருஷ்ணா... நீ சொல்வது மாதிரி, ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே உள்ள உறவு புனிதமானதுதான்..... ஆனாலும், அந்தக் காலத்து கல்விமுறை தமிழ்மொழியை, வார்த்தைகளின் அர்த்தத்தை, மக்களுக்கு நீதியையும், தர்மத்தையும் எடுத்துரைக்கும் மாண்பை, மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதாக இருந்தது கிருஷ்ணா... நாங்களெல்லாம் படிக்கும் போது, moral science என்ற ஒரு class உண்டு. அதில், நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் சொல்லிக் கொடுப்பது மட்டுமில்லை..., சுத்தம், சுகாதாரம் இவற்றை practical-ஆக எடுத்துச் சொல்வதற்காக, வாரம் தோறும் inspection வைத்து, மாணவர்களின் சுத்தம், வகுப்பறை சுத்தத்திற்காக மார்க்கும் போடுவார்கள். இது மட்டுமில்லை கிருஷ்ணா. தமிழ் second paper என்று ஒன்று உண்டு... அதற்கு non-detail book உண்டு. நீதிபோதனைக் கதைகள் பாடத்திட்டத்தில் உண்டு. Composition Note - னு ஒன்று இருக்கும். இதில்தான் சமுதாயப் பார்வை கொண்ட தலைப்புகளில் கட்டுரை எழுதப் பழக்குவார்கள். பள்ளிப் பருவத்திலேயே, மாணவர்களுக்கு, பெண் கல்வி, வரதட்சணை கொடுமை போன்ற சமுதாயக் குற்றங்களில் ஒரு விழிப்புணர்வும் வரும்... இன்று இப்படிப்பட்ட moral science என்ற class-ஏ பள்ளிகளில் இருப்பதாகத் தெரியவில்லை கிருஷ்ணா....
கிருஷ்ணர் : ஏன் மேகலா... இன்று ‘சுட்டி T. V.' என்ற ஒரு channel, T. V - யில் இருக்குதா இல்லையா... இன்னும் Cartoon Network என்று பல channel-கள், நீ சொல்லும் நீதி போதனைக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் அனைத்தையும் cartoon-ஆகக் காட்டி..., ஏன், கிருஷ்ணருடைய கதைகள், ராமாயணம், மகாபாரதக் கதைகள் கூட cartoon ஆக ஒளிபரப்பி, குழந்தைகள் மனதில் நீதி போதனைகளை, இதிகாசங்களை ஆழமாக பதியச் செய்கிறார்களே... இதுவும், modern கல்வியில் ஒரு யுக்திதானே... அந்தக் காலங்களில் இந்த T. V. வசதி இல்லாததுனால, பள்ளிக்கூடத்துல, நீதி போதனைகளுக்காக moral science class வைக்கப்பட்டது. ஏனென்றால், மாணவப் பருவத்தில், நீதிக் கதைகளைக் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும்.... உலகத் தலைவர்களாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி, நேரு, பாரதியார் இவர்களையெல்லாம், fancy dress competition-ல் மாணவர்களின் உருவத்தில் கொண்டு வந்து, மழலை மாறாத மொழியால், பாரதியார் பாடலைப் பாடச் செய்து, அர்ஜுனன், கர்ணன் மாதிரியெல்லாம் dress பண்ணி பேசச் செய்கிறார்களே.... இது அவர்களுக்கு தலைவர்களைப் பற்றியும், புராண கதாபாத்திரங்களைப் பற்றியும், practical-ஆகத் தெரியச் செய்யும் முறைதானே.. நீ என்னதான் விளக்கம் கொடுத்தாலும், அறியாத விஷயங்களை அறிந்து கொள்ளுதல், இந்தக் காலத்து தலைமுறையினரிடம் தான் நிறைய உள்ளது. நீயே கட்டுரை எழுதும் போது, தேவையான தகவல்களை google-ல் search பண்ணித்தானே எழுதுகிறாய்.... ஒரு விஷயத்தை நாமே சிந்தித்து, notes எடுத்து எழுதுவது நல்ல விஷயம் தான்..... ஆனால், அதற்கான வேலைகளை google செய்கிறது. Search பட்டன் தட்டினால் போதும்...., தகவல்களை அள்ளிக் கொள்ளலாம்..
மேகலா : அப்போ, நாம் தேடும் தகவல்களைப் பற்றிய அறிவு நமக்கு வளராதே.... வெறும் தகவல்கள் மட்டும் தானே இருக்கும்....
கிருஷ்ணர் : வெறும் தகவல்கள் மட்டும் போதும் என்ற வேலைக்கு, தகவல்கள் மட்டும் போதாதா. எல்லாவற்றையும் பூர்வாங்கமாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் அறிந்து கொள்ளட்டும். நான் ஒன்று கேட்கிறேன்... அந்தக் காலங்களில் Engineering course எத்தனை வருஷம் படித்தார்கள்...
மேகலா : ஐந்து ஆண்டுகள் கிருஷ்ணா...
கிருஷ்ணர் : இன்று நான்கு ஆண்டுகள் மட்டும் தான்.... அந்தக் காலங்களில் ஒருவர் Mech. Engg. எடுத்திருக்கிறார் என்றால், அவர் Civil, Electrical என்று எல்லாத் துறைகளைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பார்கள்... Mech. Engg. subject மூன்றாம் ஆண்டிலிருந்துதான் படிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால், இன்று பார்.... Computer Science எடுத்திருக்கிறோமா, Electronics and Communication எடுத்திருக்கிறோமா, தன் எதிர்காலம் எதில் பயணிக்கப் போகிறது என்று நன்கு தீர்மானித்த மாணவர்கள், அதை மட்டும் தான் படிக்கிறார்கள்... இன்றைய பாடத்திட்டங்களும் அப்படித்தான் இருக்கின்றன. வேறு துறையைப் பற்றிய அறிவுகளை..., தகவல்களை..., நீ சொன்னாயே..., நாங்களாக முயன்று..., யோசித்து..., எழுதினோம் என்று... ஒவ்வொருவரும் அறியும்படிக்கு internet-ல் open-ஆக பதிவு பண்ணி வைத்திருக்கிறார்கள்.... வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே....
மேகலா : என்னவோ போ கிருஷ்ணா.... நீ இந்தக் காலக் கல்விமுறையை ரொம்பப் பாராட்டித்தான் பேசுகிறாய். ஆனாலும், விஞ்ஞானிகளும்...., கண்டுபிடிப்பாளர்களும்..., மேதைகளும்..., ஏன், இன்று புழக்கத்தில் உள்ள அறிவியல் சாதனங்கள் அனைத்தையும் கண்டுபிடித்தவர்கள் அந்தக் காலத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே... வானிலை சாஸ்திரமாகட்டும்..., பல கோயில்களின் கோபுரங்களை இடிதாங்கியோடு கட்டிய கட்டிடக் கலை சாஸ்திரமாகட்டும்..., வேதங்கள்..., இசை நுணுக்கங்கள்..., ஏன், உணவு வகைகள் கூட, அந்தக் காலத்தில் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பே... கணிதத்தில், பூஜ்யத்தின் value-வை அறிந்ததும், Number Theory-யை விவரித்து விளக்கம் சொன்ன கணிதமேதை ராமானுஜரும் அந்தக் காலத்து கல்விமுறையில் படித்தவர்கள் தானே... இன்றைய விஞ்ஞான வளர்ச்சியெல்லாம், அந்தக் காலங்களில் விதைக்கப்பட்டது தானே... இன்றைய தகவல் பரிமாற்றத்தின் satellite கூட, நேற்றைய விஞ்ஞானிகளின் அறிவினால் தானே....
(தொடரும்)
Comments
Post a Comment