அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 10

மேகலா : அந்தக் காலங்களில், நாங்க எல்லாம் எங்காவது வெளியூருக்குச் செல்லணும் என்றால், அதாவது, எங்க அப்பா எங்களை மதுரைக்குக் கூட்டிச் செல்வார்..... விருதுநகர் கூட்டிச் செல்வார்.... மொத்தப் பேரும் எங்க ‘அம்பாசிடர்’ காரில்தான் செல்வோம்... அம்பாசிடர் கார் ஏழெட்டுப் பிள்ளைகளைச் சுமந்து செல்லும்படிக்கு வடிவமைக்கப்பட்ட கார்...... கார் வைத்திருப்பவர்கள் அனைவரும், 90% அம்பாசிடர் கார் தான் வைத்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உண்டோ, ..., அனைவரும் ஒரே காரில் தான் செல்வார்கள்.. உறவுகளோடு ஒரே வண்டியில் பயணம் செய்வது செம ஜாலியாக இருக்கும்.... ஆனால், இந்தக் காலங்களில், மாருதி 800-லிலிருந்து......, Innova car வரைக்கும், 4 seater car, 7 seater car என்று சொல்லித்தான் விற்பனையே செய்கிறார்கள். கார் என்னவோ பார்ப்பதற்கு ‘லாரி’ மாதிரி இருந்தாலும், 4 seater car-னா, அதுக்கு மேல ஒரு பச்சப்புள்ளையக் கூட காரில் உட்கார வைக்க முடியாதபடிதான் காரை வடிவமைக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 2 பையன், மருமகள் இருந்தால், ஆளுக்கொரு காரில் செல்வதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. உறவுகள் எல்லோரும் ஒரே காரில் travel செய்து குதூகலமாய் பேசிச் செல்வது எப்படி...., தனித்தனி family-யாக travel செய்வது எப்படி.... நீ என்ன சொன்னாலும், car-னா அது அம்பாசிடர் carதான்.... Travel-னா அது, உறவுகள் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து, இடித்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் travel செய்யும் அந்தக் காலம் தான்.... அந்தக் குதூகலம், இத்தனை கார்கள் ஊரில் இருந்தாலும் திரும்ப வரப் போவதில்லை....

கிருஷ்ணர் : அந்தக் காலங்களில், வீட்டுக்கு வீடு நிறைய பிள்ளைகள்... அதனால், ஒருவருக்கொருவர் இடித்துச் செல்வது உங்களுக்கு பெருசாத் தெரியல.... எங்களுக்கு, இடிச்சிக்கிட்டு போவதெல்லாம் ‘செட் ஆகாது’.... உன்னை ஒன்று கேட்கிறேன்..., பதில் சொல்லு பார்க்கலாம்.... இந்த ‘கார் கலாச்சாரம்’ எப்போ வந்தது....

மேகலா : நாங்க சின்னப் பிள்ளைகளாக இருந்த காலங்களில்தான், வசதியானவர்கள் கார் வாங்கினார்கள். எங்கள் காலத்திற்கும் கொஞ்ச காலத்திற்கு முன்பு, அதாவது, கி. ராஜநாராயணன் எழுதிய ‘கரிசல் காட்டு கடுதாசிகள்’ என்ற கதைத் தொகுப்பில், எங்க அப்பா காலத்தவர்கள் இளைஞர்களாக இருந்த போது, ரயில், டவுண் பஸ் முதலியவை முதன்முதலாக launching பண்ணியதை எழுதியிருப்பார். அப்போதான் train, bus எல்லாம் அறிமுகமாகி, அதன் பிறகு, மக்கள் வெளியூருக்குச் செல்வதென்றால் ரயிலையும், பஸ்ஸையும் உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். வசதி படைத்தவர்கள் ‘car' வாங்கி, அது மக்களிடையே பரவி இருந்த காலம்..., ‘பொற்காலம்’....

கிருஷ்ணர் : இப்போ சம்பாதிக்கும் அனைவரும் car வாங்குகிறார்கள். Car என்ற வசதி கிடைத்தவுடன், அது மக்களுடைய life style ஆகி விட்டது. அந்தக் காலங்களில், பல பேருடன், ரயிலிலோ, பஸ்ஸிலோ பயணித்தவர்கள் இடிச்சிக்கிட்டுனாலும், தன் குடும்பத்தாருடன் மட்டும் பயணிப்பதை விரும்ப ஆரம்பித்தார்கள். அதே மாதிரி தான், அன்று car வைத்திருப்பதே prestige issue-வாக இருந்தது போய், இன்று members-க்குத் தகுந்தபடி car வைத்திருப்பது prestige issue-வாகி விட்டது. 7 seater car நெடுந்தூர travel-க்கு..., 4 seater குட்டிக் கார் market போவதற்கு....., Alto car, self-driving-கிற்கு என்று..., தன் வசதிக்காக car வைத்திருக்கும் life style-க்கு மனிதன் வந்து விட்டான்.... Concept ஒன்றுதான்.... வசதிக்காக car என்பது போய்...., car வைத்திருப்பது life style ஆக மாறிப் போச்சு. இடிச்சிக்கிட்டுப் போவது அந்தக் காலம்.... சௌகரியமாக travel பண்ணுவது இந்தக் காலம்... இப்பச் சொல்லு..., எது சந்தோஷம் என்பதைக் காட்டிலும், எது வசதி என்று சொல்லு....

மேகலா : கிருஷ்ணா.... நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் கிருஷ்ணா... இதைக் கேட்டால், நீயும், ‘ஆமாம், அப்படித்தானே’ என்று சொல்வாய் கிருஷ்ணா...

கிருஷ்ணர் : அப்படியா.... நீ சொன்னா, அது சரியாத்தான் இருக்கும்... என்னன்னு சொல்லு....

மேகலா : இந்தக் காலத்தில், எல்லா இடங்களிலும் ஒரு கலாச்சாரம் ஊடுருவி நின்று மக்களை வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்து விடுமோ என்று பயம்மா இருக்கு கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : எதுக்கு இந்த பயம்....? உலகத்திற்கென்ன...., நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு.... சொல்லு, என்ன விஷயம்....?

மேகலா : கிருஷ்ணா.... Online shopping, work from home, online classes.... என்ற கலாச்சாரத்தைப் பற்றித்தான் சொல்லுகிறேன்.... சேலை எடுப்பதற்கோ...., நமக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கோ கடைகளுக்குச் செல்லணும்கிறது அவசியமில்லையாம்... நாங்கெல்லாம் எந்தப் பொருள் வாங்கணும்னாலும்...., ஒரு சேலை வாங்குவதானாலும், கடைக்குச் சென்று..., வாங்கும் சேலையின் material பார்த்து, பேரம் பேசி வாங்குவதே தனி சுகம்.... அதிலும், electronic பொருள் என்றால், என்ன brand வாங்கப் போகிறோம்..., அதன் rate என்ன என்று பார்த்து வாங்குவதில் மனத் திருப்தி.... இந்த மாதிரி உணர்வுகள், வாங்குபவரிடம் குறைந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.... இதில் இன்னும் ஒரு மோசமான முன்னேற்றம், food order பண்ணுவது... எங்க ஊரிலேயே, two-wheeler-ன் பின் seat-ல் black color பெட்டி வைத்திருக்கும் delivery boys ஏழெட்டுப் பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது எதில் தான் முடியுமோ.... நீ என்னதான் சொல்லு..., நேரில் சென்று பொருளை வாங்குவது, hotel-க்குச் சென்று order பண்ணி சாப்பிடுவது என்பது தனி ஜாலிதான்.... Online-ல் order பண்ணுவது, நம்மை வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்து விடும்..., என்று பயமாக இருக்கிறது கிருஷ்ணா....

கிருஷ்ணர் : கொரோனா என்னும் pandemic period உலகம் முழுக்க எத்தனை ஆண்டுகள் மக்களை வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்தது....

மேகலா : சுமார் இரண்டு வருட காலம்....

கிருஷ்ணர் : அந்த இரண்டு வருட காலம்...., வேலை பார்க்க வெளியிலே செல்ல முடியாமல் மக்கள் முடங்கியிருந்தார்கள்.... வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டோம்... சின்னஞ்சிறு பிள்ளைகளின் கல்வியை, எதிர்காலத்தை என்ன செய்வது.... ‘online classes' என்ற முறை உருவானதால்தானே.... மாணவர்களோட கல்வி தடைப்படாமல் நடைபெற்றது. சமயசஞ்சீவி மாதிரி உருவான ஒரு கல்விமுறையை நாம் போற்றத்தானே செய்யணும்.... இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சிப் பாரு. Office-க்குப் போக முடியாதவர்கள்..., வீட்டில் இருந்தபடியே, நம்ம boss வேலை செய்யச் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கவில்லையா.... கடைகளுக்குப் போவதற்கு limited time-தான் அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் announce பண்ணியவுடன், கடைக்காரர்கள், customer-க்கு phone பண்ணி, whatsapp-ல் list அனுப்பினால் home delivery பண்ணுகிறோம்..., நீங்கள் கடைக்கு வரத் தேவையில்லை என்றவுடன், உன்னை மாதிரி customer-க்கு எவ்வளவு relief ஆக இருந்தது.... நாம் ஏற்கனவே சொல்லியபடி, ஒரு comfort மக்களுக்குக் கிடைத்த பின், அதுவே அவர்களுடைய life style ஆகி விடுகிறது.... Online studies, work from home, online shopping..., இன்னும் சொல்லப் போனால், online entertainment கூட, மனிதனுடைய இன்றைய life style ஆகி விட்டது.... பஞ்சாப் மாநிலத்தில் நின்று பார்த்தால் தெரியும் நிமிர்ந்து நிற்கும் இமயமலை கூட, traffic நெரிசலில் வெளி வரும் புகை மண்டலத்தால் பார்க்க முடியாதபடிக்கு மறைந்து போனதே. ஆனால், pandemic period-ல், போக்குவரத்து இல்லாமல், புகைமூட்டமும் இல்லாமல், தெளிவாக, அழகாகத் தெரிந்த இமயமலையை பாரத மக்கள் அனைவரும் video-வில் பார்க்கவில்லையா... இதெல்லாம் work from home கொடுத்த காட்சி.... கொரோனா உலகமெங்கும் பரவியிருந்தாலும்.... சுற்றுப்புறச் சூழல் மாசு மரு இல்லாமல் இருந்தது... அது பெரிய, பெரிய கம்பெனிகளுக்கு ஒரு யோசனையைக் கொடுத்திருக்கிறது. வாரத்தில் மூன்று நாள் work from home வைத்துக் கொள்ளலாமா என்று நினைத்து செயல்படுத்துகிறார்கள்....

மேகலா : பின்ன எப்படி board meeting வைத்து discuss பண்ணுவது கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : Conference call meeting வைத்துக் கொள்ளுவோம்.... உன்னிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது.... நீ ‘சிவகாசி சமையல்’ channel எதற்கு ஆரம்பித்தாய்.....?

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?