பெண்களால் முடியும் - பாகம் 2 - மணிமேகலை தேரியப்பன்
மேகலா : கிருஷ்ணா...., பாரதியாரின் கவிதையைச் சொல்லிட்டயா... எனக்கு, விண்ணிலே பறக்கும் பெண்கள் ஞாபகம் வருது கிருஷ்ணா... ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் வரைக்கும் பெண்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பதை நாம் பார்த்து விட்டோம்ல.... Space-ல் பறந்த பெண்ணை, சில காலத்திற்கு முன்னால் எல்லோரும் பார்த்தோமே..., நினைவிருக்கிறதா கிருஷ்ணா.... கிருஷ்ணர் : OH! ஆமாம்... ‘நாசா’ அனுப்பிய விண்கலத்தில், space-க்குப் பறந்து சென்றவர்களில் ஒருவர் தான் ‘கல்பனா சாவ்லா’. விண்ணில் பறந்தவர்... விண் வெளியிலேயே காற்றோடு கரைந்து போனவள்... இப்படிப் பேசப் பேசத்தான், ‘பெண்களால் முடியும்’ என்ற வார்த்தையை, பெருமையாய் சொல்ல முடிகிறது..... மேகலா : கிருஷ்ணா..., ‘கல்பனா சாவ்லா’ ஒருவர் தான்.... இன்று, அவர் காற்றோடு கலந்து..., நூற்றுக்கும் மேலான கல்பனா சாவ்லாக்களை, விண்வெளியில் தூவி விட்டார் போலும்... ஆகாய விமானத்தை ஓட்டும் விமானிகளில் எத்தனை பேர் பெண்கள் தெரியுமா கிருஷ்ணா.... நான் முதன் முதலில் துபாய்க்குச் செல்லும் போது, அந்த விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவர், பெண்... இப்போ, ஹரித்துவார் சென்ற போது..., அங்கிருந்து Ban...