ஒப்பீடு (எப்பொழுதுமே.....), மோசமானவை அல்ல....
சில மாதங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம். வங்கியில் (Bank), மேலாளருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, நான் அடிக்கடி எங்கள் பகுதியில் பார்த்த ஒரு நபர், மேலாளரைப் பார்த்துப் பேசி விட்டு, மற்றொரு அதிகாரியைப் பார்த்து தனது அலுவலை கவனிக்கச் சென்றார். மேலாளர் என்னிடம் கூறினார், ‘இவர் ஒரு வக்கீல்; உங்கள் பகுதியில் தான் வசிக்கிறார்’. ’எதனால் இதை எனக்குச் சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன். ’அவருக்கு வயது 85; இன்னும் வக்கீல் தொழில் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார். எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. எனது வயதுக்கு (என் வயது.... ரகசியமாக இருக்கட்டுமே...!) நான் நன்றாக நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த இளைஞர் (!) 85 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாரே என்று வாயடைத்துப் போனேன். அன்றிலிருந்து, இன்னும் நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். இந்த சந்தர்ப்பத்தில் எனது ஒப்பீடு, நல்லதிலேயே முடிந்தது. ’அடுத்த வீட்டுப் பையன் ஹரி எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறான், பார். நீயும் அதே பள்ளியில், அதே வகுப்பில் தானே படிக்கிறாய்! பின் ஏன் நீ இப்படி மார்க் வாங்...