மனித நுண்ணறிவா..., செயற்கை நுண்ணறிவா....?
இன்று உலகில் மிகவும் பிரபலமாகி வருவது ‘செயற்கை நுண்ணறிவு’ (artificial intelligence). எல்லாத் துறைகளிலும் இது பயன்பட ஆரம்பித்திருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றத்தை மனித குலத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுதான். செயற்கை நுண்ணறிவையும், இயந்திர மனிதனையும் (robot), தேவையான இடங்களில் பயன்படுத்துவதால், மனிதன் மிகவும் பயனடைகிறான். நாம் செய்ய வேண்டிய வேலைகளில் மிகவும் அதீத வேகம் வேண்டியதிருக்கும் இடங்களில், robots அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் துல்லியம் (perfection) தேவைப்படுகிறதோ, அங்கும் robots செயல்படுகிறது. மனிதனால் அணுக முடியாத இடங்களிலும் இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. சில வேலைகள் செய்யும் போது மனிதனுக்கு அலுப்பு (bore) ஏற்படும். அதாவது, ஒரே மாதிரியான (திரும்பத் திரும்ப) செயல்பாடுகள் செய்ய வேண்டிய இடங்களில், அலுப்பு என்றால் என்னவென்றே தெரியாத இயந்திரங்களை உபயோகிக்கிறோம். இப்படி, எங்கெங்கு மனிதனை விட இயந்திரங்கள் சிறப்பாக இயங்க முடியுமோ, அங்கெல்லாம் அவைகளை பயன்படுத்துகிறோம். இன்றைக்கு அவைகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால்...