’தகவல் தொடர்பு’ என்னும் கலை (art)
மனிதன், எப்போது இந்த உலகில் தோன்றி வாழ ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து, ஒருவருக்கொருவர் தங்கள் சிந்தனைகளைப் பரிமாறும் அவசியம் ஏற்பட்டிருக்கும். மொழி என்ற ஒன்று இல்லாத பட்சத்தில், சைகைகளினால் மட்டுமே தங்கள் எண்ணங்களைப் பரிமாறியிருப்பார்கள். அது போக, ‘உடல் மொழி’ (body language), ரொம்பவே உதவியிருக்கும். முகம் (குறிப்பாக கண்கள்) நவரசங்களையும் பிரதிபலிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. உலகின் மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் (the one and only legend) இதை மிகவும் அருமையாக ‘நவராத்திரி’ என்ற சினிமாவில் காட்டி விட்டார். மொழி தோன்றிய பிறகு, ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டு வந்தன. Google-ன் தகவல்படி, தற்போது 6,500 மொழிகள் உலகில் இருக்கின்றன. ஆனால், இவற்றில் சில மொழிகள் பேச்சு வழக்கில் இப்போது இல்லை. மொழி தோன்றிய பின் தகவல் தொடர்பு மிகவும் சுலபமாக ஆகி விட்டது. ஆனாலும், ‘மௌனம்’ என்பது, மிகவும் சக்தி வாய்ந்த மொழி. இது எல்லா உணர்வுகளையும், அந்த அந்த சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் வெளிப்படுத்தக்கூடியது. எங்களது அப்பா, மௌனமாக இருந்தால், கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம். வீட்டிலோ, வெளி...