’இலவசம்’ என்று ஏதாவது இருக்கிறதா....?
ஆம். அநேக கோவில்களில் இலவச சாப்பாடு, ஏழை மக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. சில ‘தொண்டு நிறுவனங்களினாலும்’, இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இது போக, சில மருத்துவ நிறுவனங்கள் அவ்வப்போது, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள். இந்தச் சேவைகள் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எனவே, உண்மையிலேயே, இவைகள் ‘இலவசம்’ தான். இது தவிர, வேறு எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. விழாக்காலம் வந்தவுடன், ‘ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்’ என்று கூவிக் கூவி விற்கிறார்கள். இவை எல்லாம் நம்மை ஏமாற்றும் வியாபாரத் தந்திரங்களே. இதை வாங்கினால், ‘கரண்டி இலவசம்; இதை வாங்கினால், ‘டம்ளர்’ இலவசம். அவர்கள் கொடுக்கும் ‘இலவசப் பொருட்களின்’ விலையும் நாம் பணம் கொடுத்து வாங்கும் சாமானில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. நாம் ஏமாறத் தயாராக இருக்கும் போது, ஏமாற்றுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்? நாம் குடிக்கும் தண்ணீரே நமக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. இன்னும் சில வருடங்களில், நாம் சுவாசிக்கும் காற்றும் விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஆனால், மிகவும் சுலபமாகவும், இலவசமாகவும், நாம் கேட்காமலேயே கிடைக்கக் கூட...