அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 5
மேகலா : விசுவாமித்திரர், வசிஷ்டர் இருவரும் ராமர் மீது கொண்ட அக்கறையை, ராமாயணம் படிக்கும் பொழுதெல்லாம் படித்து வியந்து போவேன் கிருஷ்ணா... ராமரின் திறமைகளையெல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரே விசுவாமித்திரர் என்றுதான் சொல்லுவேன்.... இன்னும் சொல்லப் போனால், ராமருக்கு சீதையை மணமுடித்துக் கொடுப்பதற்காக, மிதிலை மன்னன் ஜனகரிடம் அழைத்துச் சென்றதே விசுவாமித்திரர் தானே கிருஷ்ணா.... கிருஷ்ணர் : அது மட்டுமல்ல மேகலா..... அற்புதமான சிவதனுசுவை ராமரிடம் எடுத்துக் காட்டச் சொல்லி, ராமரின் வில்திறமையை உலகுக்குக் காட்டிய பெருமை அனைத்தும் விசுவாமித்திரரையே சாரும்.... தன்னுடைய மாணவன் மீது அவருக்கிருந்த நம்பிக்கை எவ்வளவு திடமானது! ராமரின் விருப்பத்தையும், தசரதரின் விருப்பத்தையும் கேட்காமலேயே ராமருக்கும் சீதைக்கும் மணம் பேசி முடித்த பின்னரே, தசரதருக்குச் செய்தி சொல்லப்பட்டது. இதெல்லாம் ராமரின் அவதார நோக்கம் அறிந்த விசுவாமித்திரரின் மேன்மையான செயல்கள்.... மேகலா : ராமர் என்ற மாணவன்..., அவதார புருஷன் என்றாலும், ஆசிரியர் மீது அவருக்கிருந்த மதிப்பு, மரியாதை, அவர் காட்டிய பணிவு இவையெல்லாம் நாம...