அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 8
கிருஷ்ணர் : ‘கிராம ராஜ்ஜியம்’ என்றால் எப்படி....? இப்ப இருக்கிற சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை, டெல்லி என்ற நகர்ப்புறங்களை கிராமமாக மாற்றணும் என்கிறாயா... மகாத்மா காந்தி, ‘கிராம ராஜ்ஜியம்’ தான் ‘ராம ராஜ்ஜியம்’ என்று சொன்னார் என்றால், அது அவருடைய கற்பனை.... கற்பனையெல்லாம் நிஜமாக முடியாது. முதலில் விவசாயி, எளிமையாகத்தான் இருக்கணும் என்ற உன் வாதமே தப்பு.... விவசாயியை சுதந்திரமாக இருக்க விடுங்கள். இன்றைய விவசாயிகள், தங்கள் விவசாயத்தை உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.... இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும், விவசாயிகள் நின்று ஜெயிக்க வேண்டும்.... விளைய வைப்பதற்கு விவசாயி முன்வந்தால்தானே, விளைச்சலைப் பார்க்க முடியும்... Artificial உணவையா சாப்பிட முடியும்....? விவசாயத்தில், அந்தக் காலம் பொன் மயமானதா..., இல்லை, இந்தக் காலமா என்றால்..., நான் சொல்லுவேன்...., இந்தக் காலம் புத்திசாலித்தனமானது என்று... மேகலா : நீ ஏதோ என்னை வெறுப்பேற்றுவதற்காக பேசுவது போல இருக்கு கிருஷ்ணா... கிருஷ்ணர் : உண்மை நிலவரத்தைச் சொல்லுகிறேன்..., நீ வெறுப்பேற்றுவதாகச் சொல்லுகிறாய்... சரி..., நீ சந்தோ...