அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)
மேகலா : வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கும் bachelors, சமையல் செய்யத் தெரியாத, புதுசா கல்யாணம் பண்ணிய சின்னப்பொண்ணுங்கள் என்று இவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பித்தோம் கிருஷ்ணா.... இன்று பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றது கிருஷ்ணா.... கிருஷ்ணர் : Oh....! முதலில், பத்து ஆண்டுகளாகும் இந்த service-க்கு வாழ்த்துக்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னயே, அதுவும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த நீ, online மூலமாக சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டாய். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று ஒரு சாரார் online shopping-ஐயும், online teaching-ஐயும் பாராட்டிக் கொண்டிருக்கும் போது உனக்கு மட்டும் குற்றமாகத் தெரிகிறதா.... ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ.... மக்கள் தொகை பெருகி வரும் இந்தக் காலத்தில், traffic நெருக்கடி’...., இல்லையில்லை jam ஆகி, இன்னும் மோசமாகி விடுமோ என்ற சூழ்நிலையில், அதற்கான ஒரு சின்ன solution தான் இந்த வசதி.... Online வசதிகளெல்லாம் காலத்தின் கட்டாயம்.... மேகலா : ஏன் கிருஷ்ணா.... அந்தக் காலங்களில் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோம்.... அதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாத...