நாம் சுயநலவாதிகளா....?
நம் எல்லோருக்கும் வெளியில் சென்று உணவு விடுதிகளில் சாப்பிட்ட அனுபவம் நிச்சயம் இருக்கும்; இந்த ஊரடங்கு நேரத்தில் அது முடியாமல் இருக்கலாம்...! முன்பதிவு இல்லாத உணவு விடுதி என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராதவிதமாக, அன்று கூட்டம் அதிகம் இருக்கிறது. நாம் சிறிது நேரம் பொறுத்திருந்து மேஜை காலியான பிறகே உட்கார முடியும். அப்போது நமது மன ஓட்டம் எப்படி இருக்கும்....? நாம் எந்த மேஜை காலியாவதற்காகக் காத்திருக்கிறோமோ, அதில் சாப்பிடுபவர்களை நினைத்து, ‘இவர்களுக்கு என்ன இங்கிதமே தெரியவில்லை; எவ்வளவு நேரம் சாப்பிடுவார்கள்? மற்றவர்கள் காத்திருக்கிறார்களே என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காமல், ஆற அமர சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சுயநலவாதிகள்...!’ சரி..., நமக்கு மேஜை கிடைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டோம். அடுத்து ஒரு குடும்பம் சப்பிட வந்து நமது மேஜை காலியாவதற்காகக் காத்திருக்கிறார்கள். நாம் மெதுவாக சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடுகிறோம். அந்நேரம் நமது எண்ணம் எப்படி இருக்கும்? ‘இது என்ன, நம்மை நிம்மதியாகச் சாப்பிடக் கூட விடாமல், நம் அருகில் நின்று கொண்டு....! விவஸ்தையே இல்லாத மக்கள்....! -- இ...