ஏன், எனக்கு மட்டும் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வருது....?
நம்மில் சிலர் எப்போதும் இப்படிப் புலம்புவதைக் கேட்டிருப்போம் - ”எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வந்துக்கிட்டிருக்கு...”? எப்போதெல்லாம் அவர்கள் ஏதாவது பிரச்னையைச் சந்திக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி, ‘ஏன் எனக்கு மட்டும் இந்தப் பிரச்னை’? தனக்கு மட்டுமே எல்லாப் பிரச்னைகளும் வருவதாகக் கற்பனை செய்து கொள்வார்கள். ஆர்தர் ஆஷ் என்று ஒரு பெரிய டென்னிஸ் (Tennis) வீரர் இருந்தார். அவர் உலகப் புகழ் பெற்ற ‘விம்பிள்டன் டென்னிஸ்’ போட்டியில் வென்றிருக்கிறார். சில காலம் கழித்து, அவருக்கு AIDS நோய் வந்து விட்டது. ஒரு பழுதுபட்ட ரத்தப் பரிமாற்றத்தின் போது அந்த நோய் அவரைத் தாக்கியது. எல்லோரும் அவரிடம் பரிதாபமாகக் கேட்டார்கள், ‘ஏன் உங்களுக்குப் போய் இந்த நோய் வர வேண்டும்’? அதற்கு அவர் கூறிய பதில், மிகவும் பிரசித்தமானது. ‘கோடான கோடி மக்களிடையே, சில லட்ச மக்களே நல்ல டென்னிஸ் வீரர்களாக உருவெடுக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்ட சிலரே உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக ஆகிறார்கள். அவர்களுள் முதன்மையான வீரனாக ‘விம்பிள்டன் போட்டியில்’ ஜெயித்திருக்கிறேன். இது கடவுளின் கருணையில்லையா...