சிகரத்தை அடைந்தால்......., வானத்தில் ஏறு....
நம் எல்லோருக்குமே, வாழ்வில் ஒரு உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும், சிலரைத் தவிர.... எது நம்மை அந்த இலக்கை நோக்கி உந்தித் தள்ளுகிறது? ‘அந்தக் குறிக்கோளை நோக்கிய ’வேட்கை’. அந்த ‘வேட்கை’ இல்லாமல், நமது இலக்கை அடைய முடியாது. அடுத்து, இலக்கை அடையத் தேவை, ‘மனம் ஒன்றிய கூரிய அர்ப்பணிப்பு’. எது வந்தாலும், அந்தத் தடையை மீறி செயல்படக்கூடிய மன உறுதி. வழியில் எத்தனையோ (எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காததுமான) குறுக்கீடுகள் நேரலாம். அவை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற மனப்பாங்குடன் வெற்றி கொள்ள வேண்டும். இவைகளுடன், கடவுளின் அருளும் இருந்தால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். இலக்கை அடைவதற்கான முழு முயற்சிக்கு ஒரு உதாரணம் சொல்லப்படுவதுண்டு. ஜப்பானியர்களுக்கு, தங்களுக்கு மிகவும் பிடித்த உணவான மீனை மிகவும் fresh-ஆக (அப்போதுதான் பிடித்த நிலையில்) உண்ணவே பிடிக்கும். கடலின் கரையோரங்களில் மீன் கிடைப்பது குறைந்தபடியால், கடலின் உள்ளே வெகு தூரம் சென்று மீன் பிடிக்க வேண்டிய நிலை உருவானது. எனவே, பிடித்த மீனை கரைக்குக் கொண்டு வந்து விற்கும் போது அவை அந...