இது ‘இப்படித்தான் நடக்க வேண்டுமென்றிருந்தால்....’
மகாபாரதத்தில், யுதிஷ்டிரன் சூதாடிய நிகழ்ச்சி, பாண்டவர்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. யுதிஷ்டிரன் என்ற ‘தருமன்’, தர்மம் தெரிந்தவன். சூதாடுவது தவறு என்றும், பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நன்கு அறிந்தவன். இருந்தும், பல முன்னோர்களும், நெருங்கிய உறவினர்களும் அறிவுரை கூறியும் கேட்காமல், சூதாடினான். அவனுக்கு சூதாட்டம் ஆடுவதில் நாட்டம் உண்டென்றாலும், அதில் தேர்ச்சி பெற்றவன் கிடையாது. ‘சகுனி’யை ஒப்பிடும் போது, தருமன் ஒன்றுமே கிடையாது..., சூதாட்டத்தைப் பொருத்த வரையில். அப்படி இருந்தும், எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு சூதாட்டத்தைத் தொடர்ந்து ஆடுவானேன்....? அவனது அறியாமை என்று சொல்ல முடியுமா...? யார் பேச்சையும் கேட்காத ஆணவம் என்று கூறலாமா...? இல்லை, விதியின் விளையாட்டா....? ‘ இது இப்படித்தான் நடக்க வேண்டுமென்றிருந்தால், யாராலும் அதை மாற்ற முடியாது’. அதுவே ‘விதி’யின் வலிமை. ‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்’ - திருக்குறள் 380 - அதிகாரம் ‘ஊழ்’ இதன் பொருள் : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்த...