இக்கரைக்கு அக்கரை பச்சை....!
இது ஒரு லத்தீன் பழமொழியிலிருந்து வந்தது என்று Google கூறுகிறது. அந்த லத்தீன் பழமொழியின் ஆங்கில வடிவம் - The corn in another man's ground seems ever more fertile and plentiful than our own does. இதை நாம் நேரிலேயே உணரலாம். ஒரு பசுமையான வயலில் நின்று கொண்டு, தூரத்திலிருக்கும் மற்றொரு பசுமையான வயலைப் பார்த்தால் இது நன்றாகவே புரியும். நம்மில் நிறையப் பேர் இதை நேரில் உணர்ந்திருக்கலாம். நாம் அக்கரைக்குச் சென்று இந்த கரையை (நாம் முதலில் நின்று கொண்டிருந்த இடம்) பார்த்தால், அது அதீத பச்சையாகத் தெரியும். இந்தப் பழமொழியின் உண்மையான அர்த்தம் - நம்மை விட, நமக்குத் தெரிந்த மற்றவர்கள், வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக நமக்குத் தோன்றும். அருகில் சென்று அவர்கள் வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால் தான் தெரியும், அவர்களுக்கு உள்ள வேதனை, கஷ்ட நஷ்டங்கள். நாம் எப்போதும் கூறும் ஒரு வசனம், ‘அவனுக்கென்னப்பா, கொடுத்து வைத்தவன், அதிர்ஷ்டக்காரன்’. இது எவ்வளவு தவறு என்று நாம் உணர்வதேயில்லை. நம்மிடம் உள்ள வசதி வாய்ப்புக்களைப் பற்றி நாம் நினைப்பதில்லை. நமக்கு என்ன இல்லையோ (அது மற்றவரிடம் இருக்கும் பட்சத்தில்), அ...