Posts

தவறு செய்பவன் தான் ‘மனிதன்’

நம்மில் எல்லோருமே, நமது வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் (அல்லது பல சமயங்களில்) தவறு செய்கிறோம். இதில் எந்த மனிதனுக்கும் விதிவிலக்கு என்பதே கிடையாது. தவறே செய்யவில்லை என்றால் (ஒரு வேளை), அது ‘இயந்திரமாகத்தான்’ இருக்க வேண்டும். நிச்சயம் ‘மனிதன்’ அல்ல. யார் அதிகமாக தவறு செய்கிறார்கள், யார் குறைவாக என்பதில் தான் வித்தியாசம் இருக்க முடியும். தவறு என்று தெரியாமலே நாம் செய்வதுதான் ‘உண்மையான தவறு’. தெரிந்தே செய்வது, ‘தப்பு’. "தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்” - இது ஒரு பழைய சினிமா பாட்டு. தவறு எப்படி வேண்டுமானாலும் நேரலாம் - நமது அறியாமையினால், மறதியினால், வேலையில் கவனம் செலுத்தாதனால், மனப்பிறழ்ச்சியினால் - இப்படி ஏதாவது ஒன்றால். சில சமயங்களில், நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், பயிற்சியின்மையினால் கூட தவறு நிகழலாம். எப்படி, செய்யும் வேலையில் தவறு நேராமல் தப்பிப்பது? அந்த வேலைக்கான முழுப் பயிற்சி எடுத்துக் கொள்வது, அந்த வேலை பற்றிய முழு விவரமும் தெரிந்து வைத்துக் கொள்வது, மிகக் கவனமாக இருப்பது, நமக்கு ஏதோ ஒரு காரணத்தால் (வயது முதிர்வு அல்லது பிறவிக் க...

Had it happened the other way...?!

Everyone, at some point of time or the other, would have thought so (had it happened the other way...). It is wishful thinking. Nothing (with few exceptions) in the world, happens as we wish. The way it has happened is the surest thing. It was destined to happen that way.  All our efforts in a particular direction may fructify in a totally different direction (due to the will of God). So whatever happens may follow your path or the exact opposite. Hence, the conclusion is that the result may or may not have any relevance to what we think might happen. We can never say with assurance that the result will be exactly as what we have assumed or calculated it to be. It might or might not happen that way. So, the governing factor is entirely God's will. But God will help you to achieve what you plan with your sincere efforts, most of the time. So, it is our duty to do the task sincerely and leave the result to God. He knows what is best for us. At least, this is my firm belief. Even ...

எதிர்பார்ப்பு இல்லையென்றால்......, ஏமாற்றமும் இல்லை......

நாம் எப்போது ஏமாற்றமடைகிறோம்? எதையோ எதிர்பார்த்து, அது கிடைக்காமல் போகும் போது. அதை எதிர்பார்க்காமல் இருந்திருந்தால், ஏமாற்றமாவது மிஞ்சும்! எதையுமே எதிர்பாராமல் இருக்கும் போது, ஏதோ ஒன்று (நல்லது) நடந்தால், அதுவே நமக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது; நம்மை சந்தோஷப்படுத்துகிறது. வாழ்வின் முக்கிய நோக்கமே சந்தோஷமாக வாழ்வதுதானே.... ஆனால், எல்லோராலும், எப்போதும், எதையுமே எதிர்பாராமல் இருக்க முடியுமா? இது நடைமுறை சாத்தியமா....? நாம் ஒரு பிரசித்தமான கல்லூரியில் சேர்ந்து படிக்கிறோம். எதற்காக? நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல தேர்ச்சி பெற்று, வாழ்வில் நல்ல முறையில் காலூன்ற வேண்டும் என்றுதானே... அதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு விளையாட்டு வீரர், தன் திறமையை அறிந்து, ஒரு விளையாட்டுப் பயிற்சி மையத்தில் (Sports academy), சேர்கிறார்; எதற்காக? ஒரு பெரிய விளையாட்டு வீரராக ஆக வேண்டும் என்றுதானே.... அவரது எண்ணத்தில் என்ன தவறு இருக்க முடியும்....? அவரது முழுத்திறமையையும், மனப்பூர்வமான கடினமான உழைப்பையும் அதில் செலுத்துகிறார். எப்படி எதிர்பார்க்காமல் இருப்பார்....? நமது நோக்கம் (aim), நாம் பெரிய அளவில் வர...

How well do we handle criticism...?

Only the tree with ripe fruits gets hit. As long as we exist in this world, we cannot avoid being criticized. More so, when we are rich, handsome, highly successful, famous etc.... Criticisms can be on whatever we are or on whatever we perform. The best way to face the comments / criticisms on us is to 'just ignore' them, whether they are positive or negative. Just be level-headed and consider both bouquets and brickbats as equal. Of course it is the most difficult thing for a normal human being like us. We should be highly seasoned to reach this level. Only great yogis / saints have this attribute. As is known to everyone, only the stone which gets beaten and tortured by chisel repeatedly, gets to become a beautiful sculpture. When a person who wanted to humiliate Lord Buddha, came to him and hurled all sorts of abuses on him. Buddha did not react at all; he remained very calm and serene. The person who tried to insult him asked Buddha, 'I have been scolding you with all ...

மனித நுண்ணறிவா..., செயற்கை நுண்ணறிவா....?

இன்று உலகில் மிகவும் பிரபலமாகி வருவது ‘செயற்கை நுண்ணறிவு’ (artificial intelligence). எல்லாத் துறைகளிலும் இது பயன்பட ஆரம்பித்திருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றத்தை மனித குலத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுதான். செயற்கை நுண்ணறிவையும், இயந்திர மனிதனையும் (robot), தேவையான இடங்களில் பயன்படுத்துவதால், மனிதன் மிகவும் பயனடைகிறான். நாம் செய்ய வேண்டிய வேலைகளில் மிகவும் அதீத வேகம் வேண்டியதிருக்கும் இடங்களில், robots அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் துல்லியம் (perfection) தேவைப்படுகிறதோ, அங்கும் robots செயல்படுகிறது. மனிதனால் அணுக முடியாத இடங்களிலும் இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. சில வேலைகள் செய்யும் போது மனிதனுக்கு அலுப்பு (bore) ஏற்படும். அதாவது, ஒரே மாதிரியான (திரும்பத் திரும்ப) செயல்பாடுகள் செய்ய வேண்டிய இடங்களில், அலுப்பு என்றால் என்னவென்றே தெரியாத இயந்திரங்களை உபயோகிக்கிறோம். இப்படி, எங்கெங்கு மனிதனை விட இயந்திரங்கள் சிறப்பாக இயங்க முடியுமோ, அங்கெல்லாம் அவைகளை பயன்படுத்துகிறோம். இன்றைக்கு அவைகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால்...

What is the purpose of education?

What is the purpose of education? Is it just knowing the already well-known facts and figures? Do our students need to spend so much of their precious time in knowing and memorizing only the facts and details, which are already available in the webs of information? Why are the authorities connected with formulating and monitoring such aspects not doing anything about it? Are they not interested in the future generation? These are all pertinent questions that need immediate and plausible answers, if we have to make the future generation worthwhile and take the world to new heights. Gone are those days, wherein students were made to memorize everything, right from the multiplication tables to scientific and historical facts. Now every conceivable detail (be it science, mathematics, history, finance, economics, psychology….) is available at our finger-tips. There is absolutely no need to cram the facts in our brain. Our brain should be used purposefully and effectively and not to keep f...

மகாபாரதம் சொல்லிக் கொடுத்த பாடம்..., மறந்து விட்டோமே...!

இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் திறமைசாலிகளாக விளங்குகிறார்கள். பல துறைகளிலும் நிறையவே சாதிக்கிறார்கள். ஆனாலும், சில இளைஞர்கள், வலைத்தள விளையாட்டுக்களுக்கு (சூதாட்டம்) அடிமையாகும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் வரும் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்து, வாழ்க்கையையே இழந்து விடும் சூழ்நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலை உருவாகாமல் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை. பெற்றோருக்கு ஒரு பிள்ளை மட்டுமே இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், பிள்ளைக்கு அதீத செல்லம் கொடுத்து வருவதும் இந்த நிலைமை உருவாக ஒரு காரணம். அதைத் தவிர்த்து பிள்ளையைக் கண்டிக்க வேண்டிய சமயத்தில் கண்டித்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும். வலைத்தளத்தில் இன்று நிறைய சூதாட்டம் சம்பந்தப்பட்ட விளையாட்டு மென்பொருள் இருக்கிறது. இவைகளைத் தடை செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும். இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும். மேலும், பெற்றோரும் தங்களது பிள்ளைகள் இந்த மாதிரி games-ஐ அணுக முடியாத அளவுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். இதனால், சீரழிந்து வாழ்க்கையை இழந்த எத்தனையோ இளைஞர்களைப் பற்றி செய...