Posts

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)

மேகலா : வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கும் bachelors, சமையல் செய்யத் தெரியாத, புதுசா கல்யாணம் பண்ணிய சின்னப்பொண்ணுங்கள் என்று இவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பித்தோம் கிருஷ்ணா.... இன்று பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றது கிருஷ்ணா.... கிருஷ்ணர் : Oh....! முதலில், பத்து ஆண்டுகளாகும் இந்த service-க்கு வாழ்த்துக்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னயே, அதுவும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த நீ, online மூலமாக சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டாய். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று ஒரு சாரார் online shopping-ஐயும், online teaching-ஐயும் பாராட்டிக் கொண்டிருக்கும் போது உனக்கு மட்டும் குற்றமாகத் தெரிகிறதா.... ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ.... மக்கள் தொகை பெருகி வரும் இந்தக் காலத்தில், traffic நெருக்கடி’...., இல்லையில்லை jam ஆகி, இன்னும் மோசமாகி விடுமோ என்ற சூழ்நிலையில், அதற்கான ஒரு சின்ன solution தான் இந்த வசதி.... Online வசதிகளெல்லாம் காலத்தின் கட்டாயம்.... மேகலா : ஏன் கிருஷ்ணா.... அந்தக் காலங்களில் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோம்.... அதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாத...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 10

மேகலா : அந்தக் காலங்களில், நாங்க எல்லாம் எங்காவது வெளியூருக்குச் செல்லணும் என்றால், அதாவது, எங்க அப்பா எங்களை மதுரைக்குக் கூட்டிச் செல்வார்..... விருதுநகர் கூட்டிச் செல்வார்.... மொத்தப் பேரும் எங்க ‘அம்பாசிடர்’ காரில்தான் செல்வோம்... அம்பாசிடர் கார் ஏழெட்டுப் பிள்ளைகளைச் சுமந்து செல்லும்படிக்கு வடிவமைக்கப்பட்ட கார்...... கார் வைத்திருப்பவர்கள் அனைவரும், 90% அம்பாசிடர் கார் தான் வைத்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உண்டோ, ..., அனைவரும் ஒரே காரில் தான் செல்வார்கள்.. உறவுகளோடு ஒரே வண்டியில் பயணம் செய்வது செம ஜாலியாக இருக்கும்.... ஆனால், இந்தக் காலங்களில், மாருதி 800-லிலிருந்து......, Innova car வரைக்கும், 4 seater car, 7 seater car என்று சொல்லித்தான் விற்பனையே செய்கிறார்கள். கார் என்னவோ பார்ப்பதற்கு ‘லாரி’ மாதிரி இருந்தாலும், 4 seater car-னா, அதுக்கு மேல ஒரு பச்சப்புள்ளையக் கூட காரில் உட்கார வைக்க முடியாதபடிதான் காரை வடிவமைக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 2 பையன், மருமகள் இருந்தால், ஆளுக்கொரு காரில் செல்வதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. உறவுகள் எல்லோரும் ஒரே காரில் trave...

Hop..., hop..., hop jobs..., frequently!!!

  When I happened to see very recently, the group photos of the employees of the company in which I worked (in Maldives), something strange struck me. I could not make out most of the faces. Almost all are 'new' to me. I left Maldives only about 6 years back, after working for about 18 years in the company. Within the last 6 years, how come so many known faces are missing and new faces have appeared! Even the employees appointed later (after I had left Maldives) in various departments, have vanished. Very surprising! I started working in the company from 1 st November 1998. There are still some colleagues working there in all the group companies with whom I had the privilege of working. It was more like a family. May be because they belong to the earlier generation!!! I was a bit curious and wanted to know the reason for this situation. I had a casual chat on this 'subject' with a colleague, with whom I worked in the company for a long time. Based on the details of v...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 9

கிருஷ்ணர் : உன் அம்மாவும், அப்பாவும், பொங்கல் பானையை எடுத்து, அடுப்பில் வைப்பதிலிருந்து, உறவுகளோடு நீங்கள் கொண்டாடிய தைப்பொங்கலை, அந்தக் காலத்துக் குதூகலத்தோடு நீ சொன்ன போது, நீ எவ்வளவு அனுபவித்திருக்கிறாய் என்பது புரிகிறது. இந்தக் காலத்தில் நம்ம பாரதம், பலவித தொழில்களில் சாதனை புரிந்து வருகிறது என்றும் சொல்லியிருக்கிறாய். இன்றைய மக்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.... ஆனால், தமிழர் திருநாளாக என்று அடையாளப்படுத்துகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறாய். ஒன்று நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயம் சார்ந்த பண்டிகையோ, தொழில் சார்ந்த, அதாவது, ‘ஆயுத பூஜை’ பண்டிகையோ, எல்லா தரப்பு மக்களும் அதைக் கொண்டாடி மகிழவே விரும்புகிறார்கள். நீ பல உறவுகளோடு கொண்டாடிய தைப்பொங்கல்...., இன்று, தங்கள் தங்கள் உறவுகளோடு கொண்டாடுகிறார்கள்.... ‘நாங்களெல்லாம் சூரியப் பொங்கல் வைத்தோம்’ என்கிறாய்... Apartment-ல் வசிக்கும் ஹரி என்ன செய்வான்.... மதனாவோடு தானும் கரண்டி பிடித்து, குக்கரில் பொங்கல் வைத்து, குடும்பமாய் அமர்ந்து உண்பதை ‘மகிழ்ச்சி’ என்கிறான்.... பண்டிகைக் காலத்தில், ‘மகிழ்ச்சி’தானே முக்கியம்... சில வருட...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 8

கிருஷ்ணர் : ‘கிராம ராஜ்ஜியம்’ என்றால் எப்படி....? இப்ப இருக்கிற சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை, டெல்லி என்ற நகர்ப்புறங்களை கிராமமாக மாற்றணும் என்கிறாயா... மகாத்மா காந்தி, ‘கிராம ராஜ்ஜியம்’ தான் ‘ராம ராஜ்ஜியம்’ என்று சொன்னார் என்றால், அது அவருடைய கற்பனை.... கற்பனையெல்லாம் நிஜமாக முடியாது. முதலில் விவசாயி, எளிமையாகத்தான் இருக்கணும் என்ற உன் வாதமே தப்பு.... விவசாயியை சுதந்திரமாக இருக்க விடுங்கள். இன்றைய விவசாயிகள், தங்கள் விவசாயத்தை உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.... இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும், விவசாயிகள் நின்று ஜெயிக்க வேண்டும்.... விளைய வைப்பதற்கு விவசாயி முன்வந்தால்தானே, விளைச்சலைப் பார்க்க முடியும்... Artificial உணவையா சாப்பிட முடியும்....? விவசாயத்தில், அந்தக் காலம் பொன் மயமானதா..., இல்லை, இந்தக் காலமா என்றால்..., நான் சொல்லுவேன்...., இந்தக் காலம் புத்திசாலித்தனமானது என்று... மேகலா : நீ ஏதோ என்னை வெறுப்பேற்றுவதற்காக பேசுவது போல இருக்கு கிருஷ்ணா... கிருஷ்ணர் : உண்மை நிலவரத்தைச் சொல்லுகிறேன்..., நீ வெறுப்பேற்றுவதாகச் சொல்லுகிறாய்... சரி..., நீ சந்தோ...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 7

கிருஷ்ணர் : நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் மேகலா... கண்டுபிடித்தது நேற்றைய விஞ்ஞானிதான்... Satellite-ஐ launch பண்ணியது இன்றைய காலத்தில்தானே.... விஞ்ஞானிகளின் சிந்திக்கும் திறன் எப்பவும் ஒரே மாதிரிதான். அதனால்தான், புராண காலத்திலிருந்தே புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இருந்தாலும்..., சாதனங்களும், சாதனைகளும் படைப்பதற்கு, காலங்களும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டாமா... ஏவுகலத்தை விண்ணில் தவழ விட்டது நேற்றைய விஞ்ஞானி என்றாலும், அது மிதக்க விடப்பட்டது..., இந்த 21-ம் நூற்றாண்டில்தானே.... அன்றிலிருந்து technology-யோட வளர்ச்சி அசுரத்தனமானது என்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா, இல்லையா.... 2G யில் ஆரம்பித்து, 3G, 4G...., இப்ப என்ன 5G-யும் வந்து விட்டதா.... விஞ்னானம் அசுரத்தனமாக வளர்வதற்கு இன்றைய காலம் தான் சாதகமாக உள்ளது.... உண்டா..., இல்லையா.... நேற்றைய தலைமுறையினர், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நாம் பிறந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறதா, இல்லையா.... பொய் சொல்லாமல் சொல்லு.... மேகலா : நீயும் ரொம்ப technical-ஆகத்தான் பேசுற கிருஷ்ணா.... இந்த technology இல்லாமல், நாங்கெல்லாம் வாழலியா கிர...

There always is light at the end of the tunnel

There is always light at the end of the tunnel. Only thing is that for some, the length of the tunnel will be short, for some others, it will be long and for yet another set of people, it would be very long. But one should never lose hope. The length of the tunnel cannot be never-ending. We must have faith in God. A girl student from Kota, Rajasthan has cleared NEET exam with flying colors. Her story is very inspirational. When she was preparing for the exam, her father died and her mother had expired much earlier. She had to take care of 4 siblings with Rs. 500 monthly pension she got on her mother's account and some help from relatives. All such difficulties did not deter her from her preparation for NEET exam. Hard work, her perseverance and some luck (amidst all the ill-luck) had finally paid dividends. I know a person very intimately. Though well-educated, he did end up with penury at the age of 46 years, having miserably failed in his earlier endeavors. He was left with a ...