Posts

பெண்களால் முடியும் - பாகம் 2 - மணிமேகலை தேரியப்பன்

மேகலா : கிருஷ்ணா...., பாரதியாரின் கவிதையைச் சொல்லிட்டயா... எனக்கு, விண்ணிலே பறக்கும் பெண்கள் ஞாபகம் வருது கிருஷ்ணா... ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் வரைக்கும் பெண்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பதை நாம் பார்த்து விட்டோம்ல.... Space-ல் பறந்த பெண்ணை, சில காலத்திற்கு முன்னால் எல்லோரும் பார்த்தோமே..., நினைவிருக்கிறதா கிருஷ்ணா.... கிருஷ்ணர் : OH! ஆமாம்... ‘நாசா’ அனுப்பிய விண்கலத்தில், space-க்குப் பறந்து சென்றவர்களில் ஒருவர் தான் ‘கல்பனா சாவ்லா’. விண்ணில் பறந்தவர்... விண் வெளியிலேயே காற்றோடு கரைந்து போனவள்... இப்படிப் பேசப் பேசத்தான், ‘பெண்களால் முடியும்’ என்ற வார்த்தையை, பெருமையாய் சொல்ல முடிகிறது..... மேகலா : கிருஷ்ணா..., ‘கல்பனா சாவ்லா’ ஒருவர் தான்.... இன்று, அவர் காற்றோடு கலந்து..., நூற்றுக்கும் மேலான கல்பனா சாவ்லாக்களை, விண்வெளியில் தூவி விட்டார் போலும்... ஆகாய விமானத்தை ஓட்டும் விமானிகளில் எத்தனை பேர் பெண்கள் தெரியுமா கிருஷ்ணா.... நான் முதன் முதலில் துபாய்க்குச் செல்லும் போது, அந்த விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவர், பெண்... இப்போ, ஹரித்துவார் சென்ற போது..., அங்கிருந்து Ban...

வாழ்க்கையின் சில ‘தர்மசங்கடமான’ வேலைகள்..., தருணங்கள்...

நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வேலைகளைச் செய்கிறோம் - பிரியப்பட்டோ, பிரியமில்லாமலோ...., தொழில்நிமித்தமாகவோ..., வேறு வழியே இல்லாமாலோ..., - இப்படி எத்தனையோ... அவ்வாறு செய்யும் போது சில தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சிலவற்றைப் பார்க்கலாம்.... ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருப்பது (அதுவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொறுப்பில் இருப்பது) மிகவும் தர்மசங்கடமான பொறுப்பு. அதுவும், கட்சித்தலைவர் சில சமயம் பொறுப்பின்றி ஏதாவது உளறி வைத்தால், அதை நியாப்படுத்தி பத்திரிகைகளுக்கும் மற்ற ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க வேண்டும். தலைவர் செய்த தவறை அவரிடம் சுட்டிக்காட்டவும் முடியாது (ஏனென்றால், அவர் கட்சியின் மிகப் பெரிய தலைவராக இருப்பார்). ‘மெகா சீரியல்’ எழுத்தாளர், மற்றும் இயக்குனர் வேலை மிகவும் கடினமானது. ‘கதை’ என்று ஒன்று இல்லாமலேயே சுமார் 2000 episodes (சுமார் 6 - லிருந்து 7 வருடம்) ஓட்ட வேண்டும். அதுவும், ஒவ்வொரு நாளும் (அதாவது சுமார் 20 நிமிடம் ஓடும் கதை(!)யை) episode முடியும் போது ஒரு suspense-ஓடு முடிக்க வேண்டும். அதாவது மறுநாள் ஒளிபரப்பாக இருக்கும் episode-ஐ மக்க...

பெண்களால் முடியும் - பாகம் 1 (Author : Manimekalai Theriappan)

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…., புத்தம் புது தலைப்புடன் நானும் வந்திட்டேன்… என்ன தலைப்பு என்று சொல் பார்க்கலாம்… கிருஷ்ணர்  : தலைப்பு நான் சொல்லணும் என்று இங்கு வந்தேன். நீ ஏற்கனவே decide பண்ணிட்டயா…. சரி, என்ன தலைப்பு….? மேகலா  : கிருஷ்ணா! நீ என்ன தலைப்பை select பண்ணியிருக்கிறாய்…., அதச் சொல்லு முதலில்…. நான் பிறகு சொல்கிறேன்… கிருஷ்ணர்  : ‘பெண்களால் முடியும்’ – என்ற தலைப்பில், ‘உன் கருத்து’…, ‘உன் பார்வை’…, இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்னு நினைத்தேன்…. அதையே, கட்டுரையின் தலைப்பாகச் சொல்லலாம் என்று நினைத்தேன்… மேகலா  : வாவ்! Great கிருஷ்ணா…, இதே தலைப்பைத்தான் நானும் decide பண்ணியிருந்தேன்… நம்ம ரெண்டு பேர் மனசும் ஒண்ணு போல நினைக்குது கிருஷ்ணா.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர்  : நெசம்மாவா…. ஏய் லூசு…! உனக்குள்ளே இருப்பவன் நான்… உன்னோடவே சுற்றித் திரிபவன் நான்…. நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிய மாட்டேனா…. மேகலா  : ஓ….! ஆமாம்ல….. ஆனா, நீ நினைப்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியலையே…, அது ஏன் கிருஷ்ணா…. ...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)

மேகலா : வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கும் bachelors, சமையல் செய்யத் தெரியாத, புதுசா கல்யாணம் பண்ணிய சின்னப்பொண்ணுங்கள் என்று இவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பித்தோம் கிருஷ்ணா.... இன்று பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றது கிருஷ்ணா.... கிருஷ்ணர் : Oh....! முதலில், பத்து ஆண்டுகளாகும் இந்த service-க்கு வாழ்த்துக்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னயே, அதுவும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த நீ, online மூலமாக சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டாய். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று ஒரு சாரார் online shopping-ஐயும், online teaching-ஐயும் பாராட்டிக் கொண்டிருக்கும் போது உனக்கு மட்டும் குற்றமாகத் தெரிகிறதா.... ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ.... மக்கள் தொகை பெருகி வரும் இந்தக் காலத்தில், traffic நெருக்கடி’...., இல்லையில்லை jam ஆகி, இன்னும் மோசமாகி விடுமோ என்ற சூழ்நிலையில், அதற்கான ஒரு சின்ன solution தான் இந்த வசதி.... Online வசதிகளெல்லாம் காலத்தின் கட்டாயம்.... மேகலா : ஏன் கிருஷ்ணா.... அந்தக் காலங்களில் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோம்.... அதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாத...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 10

மேகலா : அந்தக் காலங்களில், நாங்க எல்லாம் எங்காவது வெளியூருக்குச் செல்லணும் என்றால், அதாவது, எங்க அப்பா எங்களை மதுரைக்குக் கூட்டிச் செல்வார்..... விருதுநகர் கூட்டிச் செல்வார்.... மொத்தப் பேரும் எங்க ‘அம்பாசிடர்’ காரில்தான் செல்வோம்... அம்பாசிடர் கார் ஏழெட்டுப் பிள்ளைகளைச் சுமந்து செல்லும்படிக்கு வடிவமைக்கப்பட்ட கார்...... கார் வைத்திருப்பவர்கள் அனைவரும், 90% அம்பாசிடர் கார் தான் வைத்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உண்டோ, ..., அனைவரும் ஒரே காரில் தான் செல்வார்கள்.. உறவுகளோடு ஒரே வண்டியில் பயணம் செய்வது செம ஜாலியாக இருக்கும்.... ஆனால், இந்தக் காலங்களில், மாருதி 800-லிலிருந்து......, Innova car வரைக்கும், 4 seater car, 7 seater car என்று சொல்லித்தான் விற்பனையே செய்கிறார்கள். கார் என்னவோ பார்ப்பதற்கு ‘லாரி’ மாதிரி இருந்தாலும், 4 seater car-னா, அதுக்கு மேல ஒரு பச்சப்புள்ளையக் கூட காரில் உட்கார வைக்க முடியாதபடிதான் காரை வடிவமைக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 2 பையன், மருமகள் இருந்தால், ஆளுக்கொரு காரில் செல்வதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. உறவுகள் எல்லோரும் ஒரே காரில் trave...

Hop..., hop..., hop jobs..., frequently!!!

  When I happened to see very recently, the group photos of the employees of the company in which I worked (in Maldives), something strange struck me. I could not make out most of the faces. Almost all are 'new' to me. I left Maldives only about 6 years back, after working for about 18 years in the company. Within the last 6 years, how come so many known faces are missing and new faces have appeared! Even the employees appointed later (after I had left Maldives) in various departments, have vanished. Very surprising! I started working in the company from 1 st November 1998. There are still some colleagues working there in all the group companies with whom I had the privilege of working. It was more like a family. May be because they belong to the earlier generation!!! I was a bit curious and wanted to know the reason for this situation. I had a casual chat on this 'subject' with a colleague, with whom I worked in the company for a long time. Based on the details of v...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 9

கிருஷ்ணர் : உன் அம்மாவும், அப்பாவும், பொங்கல் பானையை எடுத்து, அடுப்பில் வைப்பதிலிருந்து, உறவுகளோடு நீங்கள் கொண்டாடிய தைப்பொங்கலை, அந்தக் காலத்துக் குதூகலத்தோடு நீ சொன்ன போது, நீ எவ்வளவு அனுபவித்திருக்கிறாய் என்பது புரிகிறது. இந்தக் காலத்தில் நம்ம பாரதம், பலவித தொழில்களில் சாதனை புரிந்து வருகிறது என்றும் சொல்லியிருக்கிறாய். இன்றைய மக்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.... ஆனால், தமிழர் திருநாளாக என்று அடையாளப்படுத்துகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறாய். ஒன்று நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயம் சார்ந்த பண்டிகையோ, தொழில் சார்ந்த, அதாவது, ‘ஆயுத பூஜை’ பண்டிகையோ, எல்லா தரப்பு மக்களும் அதைக் கொண்டாடி மகிழவே விரும்புகிறார்கள். நீ பல உறவுகளோடு கொண்டாடிய தைப்பொங்கல்...., இன்று, தங்கள் தங்கள் உறவுகளோடு கொண்டாடுகிறார்கள்.... ‘நாங்களெல்லாம் சூரியப் பொங்கல் வைத்தோம்’ என்கிறாய்... Apartment-ல் வசிக்கும் ஹரி என்ன செய்வான்.... மதனாவோடு தானும் கரண்டி பிடித்து, குக்கரில் பொங்கல் வைத்து, குடும்பமாய் அமர்ந்து உண்பதை ‘மகிழ்ச்சி’ என்கிறான்.... பண்டிகைக் காலத்தில், ‘மகிழ்ச்சி’தானே முக்கியம்... சில வருட...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 8

கிருஷ்ணர் : ‘கிராம ராஜ்ஜியம்’ என்றால் எப்படி....? இப்ப இருக்கிற சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை, டெல்லி என்ற நகர்ப்புறங்களை கிராமமாக மாற்றணும் என்கிறாயா... மகாத்மா காந்தி, ‘கிராம ராஜ்ஜியம்’ தான் ‘ராம ராஜ்ஜியம்’ என்று சொன்னார் என்றால், அது அவருடைய கற்பனை.... கற்பனையெல்லாம் நிஜமாக முடியாது. முதலில் விவசாயி, எளிமையாகத்தான் இருக்கணும் என்ற உன் வாதமே தப்பு.... விவசாயியை சுதந்திரமாக இருக்க விடுங்கள். இன்றைய விவசாயிகள், தங்கள் விவசாயத்தை உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.... இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும், விவசாயிகள் நின்று ஜெயிக்க வேண்டும்.... விளைய வைப்பதற்கு விவசாயி முன்வந்தால்தானே, விளைச்சலைப் பார்க்க முடியும்... Artificial உணவையா சாப்பிட முடியும்....? விவசாயத்தில், அந்தக் காலம் பொன் மயமானதா..., இல்லை, இந்தக் காலமா என்றால்..., நான் சொல்லுவேன்...., இந்தக் காலம் புத்திசாலித்தனமானது என்று... மேகலா : நீ ஏதோ என்னை வெறுப்பேற்றுவதற்காக பேசுவது போல இருக்கு கிருஷ்ணா... கிருஷ்ணர் : உண்மை நிலவரத்தைச் சொல்லுகிறேன்..., நீ வெறுப்பேற்றுவதாகச் சொல்லுகிறாய்... சரி..., நீ சந்தோ...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 7

கிருஷ்ணர் : நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் மேகலா... கண்டுபிடித்தது நேற்றைய விஞ்ஞானிதான்... Satellite-ஐ launch பண்ணியது இன்றைய காலத்தில்தானே.... விஞ்ஞானிகளின் சிந்திக்கும் திறன் எப்பவும் ஒரே மாதிரிதான். அதனால்தான், புராண காலத்திலிருந்தே புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இருந்தாலும்..., சாதனங்களும், சாதனைகளும் படைப்பதற்கு, காலங்களும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டாமா... ஏவுகலத்தை விண்ணில் தவழ விட்டது நேற்றைய விஞ்ஞானி என்றாலும், அது மிதக்க விடப்பட்டது..., இந்த 21-ம் நூற்றாண்டில்தானே.... அன்றிலிருந்து technology-யோட வளர்ச்சி அசுரத்தனமானது என்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா, இல்லையா.... 2G யில் ஆரம்பித்து, 3G, 4G...., இப்ப என்ன 5G-யும் வந்து விட்டதா.... விஞ்னானம் அசுரத்தனமாக வளர்வதற்கு இன்றைய காலம் தான் சாதகமாக உள்ளது.... உண்டா..., இல்லையா.... நேற்றைய தலைமுறையினர், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நாம் பிறந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறதா, இல்லையா.... பொய் சொல்லாமல் சொல்லு.... மேகலா : நீயும் ரொம்ப technical-ஆகத்தான் பேசுற கிருஷ்ணா.... இந்த technology இல்லாமல், நாங்கெல்லாம் வாழலியா கிர...

There always is light at the end of the tunnel

There is always light at the end of the tunnel. Only thing is that for some, the length of the tunnel will be short, for some others, it will be long and for yet another set of people, it would be very long. But one should never lose hope. The length of the tunnel cannot be never-ending. We must have faith in God. A girl student from Kota, Rajasthan has cleared NEET exam with flying colors. Her story is very inspirational. When she was preparing for the exam, her father died and her mother had expired much earlier. She had to take care of 4 siblings with Rs. 500 monthly pension she got on her mother's account and some help from relatives. All such difficulties did not deter her from her preparation for NEET exam. Hard work, her perseverance and some luck (amidst all the ill-luck) had finally paid dividends. I know a person very intimately. Though well-educated, he did end up with penury at the age of 46 years, having miserably failed in his earlier endeavors. He was left with a ...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 6

மேகலா : தெரியும் கிருஷ்ணா.... பி. டி. உஷா என்னும் தங்கமகளைத் தெரியாதவர் இந்த இந்தியாவிலேயே கிடையாதுல கிருஷ்ணா... கிருஷ்ணர் : இந்தத் தங்கமகளின் கால்கள் மான் மாதிரி வேகம் காட்டுவது என்று கண்டுபிடித்தது யார்.... அவருக்கு முறையாகப் பயிற்சி கொடுத்தால், உலக அளவில் ஓட்டப் பந்தயத்தில் சிகரம் தொடுவார் என்று கணித்தது யார்.... அவராகப் பயிற்சி எடுத்திருந்தால், தங்கமகளாக முடியுமா.... மேகலா : நீ சொல்றது correct கிருஷ்ணா.... அவருடைய coach O. M. நம்பியாரின் தீவிரமான coaching-தான், P. T. உஷாவின் வெற்றிக்குக் காரணமாகியது... அந்த ஆண்டு அவருக்கு சிறந்த பயிற்சியாளருக்கான ‘துரோணாச்சாரியார்’ அவார்டும் கிடைத்தது.... இந்த வீராங்கனைக்கு மட்டுமல்ல கிருஷ்ணா... ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் அவரவர் திறமைகளை வெளிக்கொணர்வது அவங்களோட coach தான் என்பதில் சந்தேகமே கிடையாது கிருஷ்ணா.... கிருஷ்ணர் : நான் சொன்னது சரியாப் போச்சா.... அந்தக் காலம், இந்தக் காலம், எந்தக் காலமானாலும் மாணவர்களின் திறமை மீது அசாத்திய நம்பிக்கையும்...., அதை வெளிக்கொணர்வதில் தீவிர முனைப்பும் கொண்டவர் தான் ஆசிரியர்.... இதில் விதிவிலக...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 5

மேகலா : விசுவாமித்திரர், வசிஷ்டர் இருவரும் ராமர் மீது கொண்ட அக்கறையை, ராமாயணம் படிக்கும் பொழுதெல்லாம் படித்து வியந்து போவேன் கிருஷ்ணா... ராமரின் திறமைகளையெல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரே விசுவாமித்திரர் என்றுதான் சொல்லுவேன்.... இன்னும் சொல்லப் போனால், ராமருக்கு சீதையை மணமுடித்துக் கொடுப்பதற்காக, மிதிலை மன்னன் ஜனகரிடம் அழைத்துச் சென்றதே விசுவாமித்திரர் தானே கிருஷ்ணா.... கிருஷ்ணர் : அது மட்டுமல்ல மேகலா..... அற்புதமான சிவதனுசுவை ராமரிடம் எடுத்துக் காட்டச் சொல்லி, ராமரின் வில்திறமையை உலகுக்குக் காட்டிய பெருமை அனைத்தும் விசுவாமித்திரரையே சாரும்.... தன்னுடைய மாணவன் மீது அவருக்கிருந்த நம்பிக்கை எவ்வளவு திடமானது! ராமரின் விருப்பத்தையும், தசரதரின் விருப்பத்தையும் கேட்காமலேயே ராமருக்கும் சீதைக்கும் மணம் பேசி முடித்த பின்னரே, தசரதருக்குச் செய்தி சொல்லப்பட்டது. இதெல்லாம் ராமரின் அவதார நோக்கம் அறிந்த விசுவாமித்திரரின் மேன்மையான செயல்கள்.... மேகலா : ராமர் என்ற மாணவன்..., அவதார புருஷன் என்றாலும், ஆசிரியர் மீது அவருக்கிருந்த மதிப்பு, மரியாதை, அவர் காட்டிய பணிவு இவையெல்லாம் நாம...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 4

மேகலா : கடலளவு ஞானத்தைக் கொடுக்கும் technology தலைமுறையினரை, ஒன்பதாம் வாய்ப்பாடு சொல்லச் சொல்லு கிருஷ்ணா.... அந்தக் காலங்களில், school-க்குப் போனவுடனேயே, கடவுள் வாழ்த்து பாடி முடிந்ததும், மூன்றாம் வாய்ப்பாடிலிருந்து ஒன்பதாம் வாய்ப்பாடு வரை சொல்லியாக வேண்டும்... தினந்தோறும் சொல்லுவதால், கணக்குப் பாடத்தில் வாய்ப்பாடை மறக்காமல் உபயோகப்படுத்த முடியும்... அந்தக் காலங்களில் கணக்கு exam-க்கு, 20 மார்க்குக்கு மனக்கணக்கு exam ஒன்று நடக்கும். அந்தக் கணக்கு செய்வதற்கு இந்த வாய்ப்பாடு practice-தான் நமக்கு கை கொடுக்கும். இன்று கடைக்குப் போய் சாமான் வாங்கினால், bill-ஐ சரி பார்க்க, calculator-ஐத்தான் இன்றைய தலைமுறையினர் தேடுகிறார்கள்..... இன்னும், என் மாமனார், அப்பா காலங்களில் 1/16, 1/8 வாய்ப்பாடுகளை மனப்பாடமாகச் சொல்லுவார்கள். அதனால், மனதிலேயே அத்தனை கணக்கு வழக்குகளையும் அவர்களால் எளிதாக சரி பார்க்க முடிந்தது. இது ஞாபக சக்தி திறனையும் வளர்த்தது. இன்று எது எடுத்தாலும், pen drive-ல் ஏற்றிக் கொள்வது...., அல்லது phone-ல் ஏற்றிக் கொள்வது...., ஞாபக சக்திக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் சம்பந்தமே கிடையாத...

Is 'curiosity' the mother of invention...?

They say, 'necessity' is the mother of invention. It is certainly true. When some necessity arises, we look for a 'workable solution' to surmount the difficult moment. Fine, it may not be the best solution, but will work sufficiently enough to see through the 'difficult situation'. The most conspicuous recent example is the WFH model, (Work From Home), (although it cannot be called as 'invention') which was widely adapted the world over, to overcome the difficulties posed by COVID-19. Movement of people from one place to another was prohibited and restricted to a great extent. But, at the same time, we could not go on without working for a prolonged period. Though WFH model was in vogue earlier too, albeit in very few areas, it was put into use almost in all walks of life, be it education, business, ceremonies, entertainment..., and what not. Of late, throughout the world, drinking water has become a 'rare commodity'. So, a lot of research is goi...

கடவுளைத் தேடுகிறேன்....

  கடவுள் ஒரு முறை ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது , அங்கு நாரதர் வந்தார் …. நாரதர் வந்தது கூடத் தெரியாமல் கடவுள் யோசனையில் இருப்பதைப் பார்த்து …. ‘ ஹ்கு .. கும் ’ என்று கனைத்து தன் வரவைத் தெரிவித்தார் நாரதர் …. கடவுளோ , சுற்றி நடப்பது எதையும் அறியாதவராக தன் யோசனையைத் தொடர்ந்தார் . ’ கடவுளே …, மன்னிக்கவும் …. நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படியென்ன பலத்த யோசனை …. என்னிடம் சொன்னால் …, நான் ஏதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன் ’ என்றார் நாரதர் . ’ ஓ ! நீயா …. வா …. வந்து உட்கார் ’ என்று சொன்ன கடவுள் , ‘ நாரதரே , எனக்கு ஒரு சந்தேகம் . ஆறறிவுள்ள மனிதனைப் படைக்கும் போது , ‘ வெட்கம் ’…, ‘ கோபம் ’…, ‘ கருணை ’…, ‘ பயம் ’…, ‘ அறிவு ’…., ’ அறியாமை ’…, என்று எல்லா குணங்களையும் வைத்தேன் . ‘ ஆசை ’ என்ற குணத்தை வைக்கும் போது , கொஞ்சம் தயங்கத்தான் செய்தேன் . ‘ திருப்தி ’ யை வைத்து விட்டால் , மனிதன் ஆசைகள் நிறைவேறியதும் , ‘ திருப்தி ’ அடைந்து விடுவான் என்று நினைத்தேன் . ஆனால் , மனிதனின் பிரச்னைகள் தீராமல் , எல்லோரும் மனக்குறைவா...